ADDED : மார் 17, 2024 12:58 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஒத்தக்கடை: மதுரை உத்தங்குடி மாநகராட்சி ரோஜாவனம் ஆதரவற்றோர் இல்லத்தில் 100 சதவீத ஓட்டுப்பதிவு குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.
ஓட்டுப்பதிவை வலியுறுத்தி வண்ணக்கோலம் வரைந்து பொங்கல் வைத்தனர். ஓட்டளிப்பதன் கடமை குறித்து மூத்த குடிமக்களுக்கு விளக்கப்பட்டது.'அனைவரும் ஓட்டளிப்போம்' என உறுதிமொழி எடுத்துக்கொண்டனர். ஆர்.டி.ஓ ஷாலினி, தாசில்தார் பழனிகுமார், துணை தாசில்தார்கள் முத்துலட்சுமி, பூமாயி, ஆர்.ஐ.,க்கள், வி.ஏ.ஓ.,க்கள் பங்கேற்றனர்.

