ADDED : ஜூலை 09, 2025 07:44 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மதுரை : மதுரை நகரில் நேற்றுமுன்தினம் பலத்த காற்று வீசியது.
கரும்பாலை மாநகராட்சி காலனி பகுதியில் பழமையான மரம் வேருடன் சாய்ந்து பிரியதர்ஷினி என்பவரது கார் மீது விழுந்ததில் கார் நொறுங்கியது. மின்கம்பியும் மீது விழுந்ததால் மின்கம்பம் வளைந்து மின் வயர்கள் அறுந்து தொங்கின. மேலும் மரத்தின் அருகே இருந்த சுற்றுச்சுவரும் இடிந்து விழுந்ததில் டூவீலர் முழுமையாக சேதமடைந்தது. 5 மணி நேரத்திற்கும் மேலாக மின்தடை ஏற்பட்டது.