ADDED : ஜூலை 29, 2025 01:30 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருமங்கலம்: திருமங்கலம் விமான நிலைய ரோடு ரயில்வே கிராசிங்கில் பாலம் அமைக்கும் பணி நடக்கிறது.
நேற்று காமராஜபுரம் வேளாண் விரிவாக்க அலுவலகம் அருகே பள்ளம் தோண்டியபோது காவிரி கூட்டு குடிநீர் திட்ட குழாய் உடைந்தது. அதிகளவில் தண்ணீர் வெளியேறி தனியார் பள்ளி மைதானத்திற்குள் சென்றது. கற்பக நகர், காமராஜபுரம், ஆறுமுகம் வடபகுதி, கிறிஸ்டியன் காலனி, சோனை மீனா நகர் உள்ளிட்ட பகுதிகளுக்கு குடிநீர் விநியோகம் பாதித்தது.