/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
பானைபிரி அமைத்தால் போலீஸ் மூலம் நடவடிக்கை நீர்வளத்துறை எச்சரிக்கை
/
பானைபிரி அமைத்தால் போலீஸ் மூலம் நடவடிக்கை நீர்வளத்துறை எச்சரிக்கை
பானைபிரி அமைத்தால் போலீஸ் மூலம் நடவடிக்கை நீர்வளத்துறை எச்சரிக்கை
பானைபிரி அமைத்தால் போலீஸ் மூலம் நடவடிக்கை நீர்வளத்துறை எச்சரிக்கை
ADDED : டிச 17, 2024 04:12 AM
திருப்பரங்குன்றம்: 'திருப்பரங்குன்றம் கண்மாய்களுக்கு தண்ணீர்செல்லும் நிலையூர் கால்வாய்களில் பானை பிரி அமைப்பவர்கள் மீது போலீசார் மூலம் நடவடிக்கை எடுக்கப்படும்' என நீர்வளத்துறையினர் எச்சரித்துள்ளனர்.
திருப்பரங்குன்றம் தென்கால், பாணாங்குளம், செவ்வந்திகுளம், குறுகட்டான், சேமட்டான்,மேல நெடுங்குளம், நிலையூர் பெரிய கண்மாய்கள் உள்ளன.
வைகை அணையில் திறக்கப்படும் தண்ணீர்,மழை நீரும் நிலையூர் கால்வாய்கள் மூலம் இக்கண்மாய் நிரம்பும். இந்த ஆண்டு மழைநீர் திறக்கப்பட்டுள்ளது.
நிலையூர் கால்வாயில் பல இடங்களில் பானைப்பிரி அமைத்து மீன்பிடிக்கின்றனர். பானை பிரி அமைப்பவர்கள் அருகில் உள்ள ஷட்டர்களை அடைத்து விடுகின்றனர். இதனால்கண்மாய்கள் முழுமையாக நிரம்புவதில்லை. தண்ணீர் தடுக்கப்படுவதால் கால்வாயை ஒட்டி உள்ள குடியிருப்பு பகுதிகளுக்குள் புகுந்து வீணாகிறது.
பானை பிரி அமைத்துள்ளவர்கள் உடனடியாக அகற்றி விட வேண்டும். இல்லையெனில் அவர்கள் மீது போலீசில் புகார் செய்து சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என நீர்வளத் துறையினர் எச்சரித்துள்ளனர்.