/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
'கழிவு நீரில் வசிக்கிறோம் பன்றிகளால் பரிதவிக்கிறோம்'
/
'கழிவு நீரில் வசிக்கிறோம் பன்றிகளால் பரிதவிக்கிறோம்'
'கழிவு நீரில் வசிக்கிறோம் பன்றிகளால் பரிதவிக்கிறோம்'
'கழிவு நீரில் வசிக்கிறோம் பன்றிகளால் பரிதவிக்கிறோம்'
ADDED : ஜூன் 19, 2025 02:53 AM

மேலுார்: மேலுார் நகராட்சி 12வது வார்டு எஸ்.எம். நகர் பகுதியில் வரி வசூலித்து விட்டு வசதி செய்து தரவில்லை என் நகராட்சி நிர்வாகம் மீது புகார் எழுந்துள்ளது.
இந்நகரில் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வசிக்கின்றனர். இப்பகுதி கழிவுநீர் வெளியேற ஏற்கனவே கால்வாய் கட்டப்பட்டது. இதை மறித்து நகராட்சி நிர்வாகம் தார் ரோடு அமைத்தது. அதனால் இப்பகுதியில் கழிவுநீர் வெளியேற வழி இல்லாமல் தேங்கி கிடக்கிறது.
முத்தையா: கால்வாயை பராமரிக்காததால் கழிவு நீர் வீடுகளை சூழ்ந்துள்ளது. அதனால் கொசு உற்பத்தியாகி தொற்றுநோய் பரவுகிறது. தவிர துர்நாற்றத்துடன் சுகாதாரக் கேடாக காணப்படுவதால் வீட்டிற்குள்ளே முடங்கி கிடக்கிறோம். இக்கழிவு நீரில் பன்றிகள் வசிப்பதால் காய்ச்சல் உள்ளிட்ட உடல்நலக் கோளாறு ஏற்படுகிறது.
நகராட்சி அதிகாரிகளிடம் பலமுறை முறையிட்டும் நடவடிக்கை இல்லை.
வரி வசூலிக்கும் நகராட்சி நிர்வாகம் வசதி ஏற்படுத்தி தரவில்லை என்றார்.