/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
வாடிப்பட்டியில் உலகக்கோப்பைக்கு வரவேற்பு
/
வாடிப்பட்டியில் உலகக்கோப்பைக்கு வரவேற்பு
ADDED : நவ 16, 2025 04:09 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
வாடிப்பட்டி: ஜூனியர் ஹாக்கி உலகக் கோப்பை போட்டிகள் நவ.,28 துவங்கி டிச.,12 வரை மதுரை மற்றும் சென்னையில் நடக்கிறது.
இதில் வழங்கப்பட உள்ள கோப்பை க்கு தாய் பள்ளியில் வரவேற்பு அளிக்கப்பட்டது. பள்ளி தாளாளர் காந்தி தலைமை வகித்தார். இந்திய ஹாக்கி முன்னாள் வீரர் ராஜா கோப்பையை அறிமுகம் செய்தார்.
மாவட்ட விளையாட்டு அலுவலர் ராஜா, ஹாக்கி சங்க தலைவர் கண்ணன், முன்னாள் மாவட்ட விளையாட்டு அலுவலர் முருகன் முன்னிலை வகித்தனர்.
ஏற்பாடுகளை எவர்கிரேட் ஹாக்கி சங்க செயலர் சிதம்பரம், துணை செயலாளர் சரவணன், வெள்ளைச்சாமி, வீரகாளிதாஸ், உடற்கல்வி ஆசிரியர்கள் சுரேஷ், சந்திரமோகன், செய்திருந்தனர்.சங்க தலைவர் ராஜா நன்றி கூறினார்.

