/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
உசிலம்பட்டியில் நிரம்பிய கிணறுகள் 58 கிராம கால்வாயால் நீர்மட்டம் உயர்வு
/
உசிலம்பட்டியில் நிரம்பிய கிணறுகள் 58 கிராம கால்வாயால் நீர்மட்டம் உயர்வு
உசிலம்பட்டியில் நிரம்பிய கிணறுகள் 58 கிராம கால்வாயால் நீர்மட்டம் உயர்வு
உசிலம்பட்டியில் நிரம்பிய கிணறுகள் 58 கிராம கால்வாயால் நீர்மட்டம் உயர்வு
ADDED : டிச 18, 2024 06:08 AM

உசிலம்பட்டி : உசிலம்பட்டி பகுதியில் நிலத்தடி நீர்மட்டம் அதிகரித்துள்ளதால் நடுப்பட்டி ஊராட்சியில் கிணறுகள் நிரம்பி வழிகின்றன.
உசிலம்பட்டி பகுதியில் 58 கிராம கால்வாய் பாசனம் காரணமாக நிலத்தடி நீர்மட்டம் தொடர்ந்து உயர்ந்து வருகிறது. 800 அடிக்கும் கீழாக இருந்த நீர்மட்டம் சில ஆண்டுகளாக கால்வாயில் தண்ணீர் வரத்து, மழைநீர் காரணமாக 25 அடிக்கு உயர்ந்துள்ளது.
நீர்வரத்து ஓடைகளின் அருகேயுள்ள பகுதிகளில் நிலப்பரப்புக்கும் மேலாக வந்துள்ளதால் தரைமட்ட கிணறுகள் பொங்கி தண்ணீர் வெளியேறுகிறது. மானாவாரி நிலப் பகுதிகளில் தற்போது நெல் பயிரிடும் அளவுக்கு நீர்மட்டம் உயர்ந்துள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
நடுப்பட்டி அழகர்சாமி: 5 ஆண்டுகளுக்கு முன் தண்ணீர் பற்றாக்குறையால் கிணறுகள் வறண்டன. நிலத்தில் 2 அல்லது 3 போர்கள் போட்டு தண்ணீர் எடுத்து விவசாயம் செய்தோம். ஆனால் 58 கிராம கால்வாயில் நீர்வரத்து துவங்கியதில் இருந்து கிணறுகளில் தண்ணீர் ஊறத் துவங்கியது. இந்தாண்டு தொடர் மழையால் கீரிபட்டி கண்மாய்க்குச் செல்லும்வெள்ளைமலை ஓடையில் தொடந்து ஊற்று நீர் வருகிறது.
இதனால் இடையபட்டி விலக்கில் இருந்து நடுப்பட்டி வழியாக தாதம்பட்டி செல்லும் வழியில் உள்ள நிலங்களில் நிலமட்டத்திற்கும் மேலாக தண்ணீர் மட்டம் உயர்ந்துள்ளது. கைவிடப்பட்ட கிணறுகளில் தண்ணீர் பொங்கி வெளியேறுகிறது. தண்ணீருக்காக அமைத்த போர்வெல்கள் பயனற்றதாகிவிட்டன. கால்வாயில் ஆண்டுதோறும் தண்ணீர் கிடைத்தால் இப்பகுதி மேலும் செழிப்பாக மாறிவிடும் என்றார்.