/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
கூட்டுறவு சங்கங்களின் ரூ.8.91 கோடி என்னாச்சு
/
கூட்டுறவு சங்கங்களின் ரூ.8.91 கோடி என்னாச்சு
ADDED : ஜூலை 05, 2025 12:49 AM
மதுரை; கூட்டுறவு சங்கங்களுக்கான ரூ.8.91 கோடியை வழங்குமாறு தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழக (டி.என்.சி.எஸ்.சி.) மதுரை துணை மண்டல மேலாளர் ஹேமாசுந்தரியிடம் பண்டகசாலை ஊழியர்கள் கோரிக்கை வைத்தனர்.
மாநில பொதுச் செயலாளர் வெங்கடாசலபதி, மாவட்ட துணைத்தலைவர் செல்வம், செயலாளர் ஜீவானந்தம் கூறியதாவது:
கூட்டுறவுத்துறை சார்பில் மதுரை மண்டலத்தில் 2020 - 21 வரை கொரோனா காலத்தில் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகத்தில் ரேஷன் கடைகளுக்கான அத்தியாவசியப் பொருட்களை கொள்முதல் செய்த வகையில் 54 கூட்டுறவு சங்கங்களுக்கு டி.என்.சி.எஸ்.சி., நிர்வாகம் ரூ.8.91 கோடி வரை தரவேண்டியுள்ளது. மூன்றாண்டுகளை கடந்த நிலையில் தற்போது வரை தொகை விடுவிக்கப்படாததால் சங்கங்கள் நிதி நெருக்கடியில் தவிக்கின்றன.
இத்தொகையை டி.என்.சி.எஸ்.சி., நிர்வாகம் கூட்டுறவு சங்கங்களுக்கு பிரித்து கொடுக்காமல் காலம் தாழ்த்துவதால் ஊழியர்களுக்கான பணப்பலன்களை பெற முடியாத நிலை உள்ளது. மேலும் ரேஷன் கடைகளுக்கான அத்தியாவசியப் பொருட்கள் கொள்முதலுக்கு மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியில் வட்டிக்கு பணம் பெறும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளதால் உடனடியாக தொகையை விடுவிக்க வேண்டும் என்றனர்.