/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
தாமிரபரணியை சுத்தம் செய்ய திட்டம் என்ன: : ஐகோர்ட் கேள்வி
/
தாமிரபரணியை சுத்தம் செய்ய திட்டம் என்ன: : ஐகோர்ட் கேள்வி
தாமிரபரணியை சுத்தம் செய்ய திட்டம் என்ன: : ஐகோர்ட் கேள்வி
தாமிரபரணியை சுத்தம் செய்ய திட்டம் என்ன: : ஐகோர்ட் கேள்வி
ADDED : நவ 26, 2024 01:19 AM

மதுரை: திருநெல்வேலி தாமிரபரணி ஆற்றில் கழிவுநீர் கலப்பதை தடுக்க தாக்கலான வழக்கில், 'சுத்தம் செய்ய ஏற்கனவே தமிழக அரசு அறிவித்துள்ள திட்டம், நிதி ஒதுக்கீடு குறித்து கலெக்டர் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்' என, உயர் நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டது.
செய்துங்கநல்லுாரை சேர்ந்த காமராஜ் என்பவர், 2018ல் தாக்கல் செய்த பொதுநல மனு:
திருநெல்வேலி தாமிரபரணி ஆற்றின் கரையில் பழமையான மண்டபங்கள், படித்துறைகள் உள்ளன. இவற்றை புதுப்பிக்க வேண்டும். ஆற்றில் கழிவுநீர் கலக்காமல் தடுத்து, சுத்திகரிப்பு நிலையங்கள் அமைக்க வேண்டும். ஆற்றை துாய்மையாக பராமரிக்க நடவடிக்கை எடுக்க தமிழக அரசுக்கு உத்தரவிட வேண்டும்.
இவ்வாறு குறிப்பிட்டிருந்தார்.
நீர்நிலைகள் தொடர்பான வழக்குகளை விசாரிக்கும் நீதிபதிகள், ஜி.ஆர்.சுவாமிநாதன், பி.புகழேந்தி அமர்வு அவ்வப்போது உத்தரவு பிறப்பிக்கிறது.
அதன் அடிப்படையில், அரசு தரப்பில் மேற்கொண்ட நடவடிக்கை குறித்து, அறிக்கை தாக்கல் செய்யப்படுகிறது. நீதிபதிகள் இருவரும், நவ., 10ல் தாமிரபரணியில் ஆய்வு செய்தனர்.
நேற்று விசாரித்த அதே நீதிபதிகள் அமர்வு: தாமிரபரணியை சுத்தம் செய்வதற்கான திட்டம், அதற்குரிய நிதியை ஒதுக்கி, ஏற்கனவே தமிழக அரசு அரசாணை பிறப்பித்துள்ளது.
அவ்விபரம் குறித்து ஆவணங்களுடன் திருநெல்வேலி கலெக்டர், மாநகராட்சி கமிஷனர் டிச., 9ல் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்.
இவ்வாறு உத்தரவிட்டனர்.