/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
பழனிசாமி கருத்தை மதிக்காத ஸ்டாலின் என்ன அவதார புருஷரா: உதயகுமார்
/
பழனிசாமி கருத்தை மதிக்காத ஸ்டாலின் என்ன அவதார புருஷரா: உதயகுமார்
பழனிசாமி கருத்தை மதிக்காத ஸ்டாலின் என்ன அவதார புருஷரா: உதயகுமார்
பழனிசாமி கருத்தை மதிக்காத ஸ்டாலின் என்ன அவதார புருஷரா: உதயகுமார்
ADDED : டிச 04, 2024 08:35 AM
மதுரை : '' எதிர்க்கட்சி தலைவர் பழனிசாமியின் ஆலோசனைகளை கருத்தில் கொள்ளாமல் ஏதோ முதல்வர் ஸ்டாலின் மட்டும்தான் இந்த தமிழகத்தை காக்க பிறந்த 'அவதார புருஷர்' போல் செயல்பட்டதால் 14 மாவட்டங்களில் 69 லட்சம் குடும்பங்கள், ஒன்றரை கோடி பேர் மோசமாக பாதிக்கப்பட்டுள்ளார்கள்'' என சட்டசபை எதிர்க்கட்சி துணைத்தலைவர் உதயகுமார் கூறினார்.
மதுரையில் நேற்று அவர் கூறியதாவது:
தமிழகத்தில் மிகப்பெரிய பேரழிவை பெஞ்சல் புயல் ஏற்படுத்தியுள்ளது. எதிர்க்கட்சித் தலைவர் பழனிசாமியின் ஆலோசனைகளை கருத்தில் கொள்ளாமல் ஏதோ முதல்வர் ஸ்டாலின் மட்டும்தான் இந்த தமிழகத்தை காக்க பிறந்த 'அவதார புருஷர்' போல் செயல்பட்டதால் 14 மாவட்டங்களில் 69 லட்சம் குடும்பங்கள், ஒன்றரை கோடி பேர் மோசமாக பாதிக்கப்பட்டுள்ளார்கள். முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கவில்லை.
நிவாரண முகாமில் மக்களுக்கு மருந்து, உணவு இல்லை.
பழனிசாமி அரசியல் நாகரீகத்தோடு கருத்துக்களை கூறியது தேச குற்றமா. அவர் முதல்வராக இருந்த போது ஸ்டாலின் எதிர்க்கட்சித் தலைவராக இருந்தார். அப்போது அபாண்டமாக பொய்களை கூறியதை எல்லாம் சகிப்புத்தன்மையோடு, பொறுமையின் அடையாளமாகவும் பழனிசாமி கேட்டார்.
இன்று ஸ்டாலின் என்ற தனிப்பட்ட நபரிடம் பழனிசாமி கோரிக்கை வைக்கவில்லை. முதல்வர் என்ற பதவிக்கு தான் கோரிக்கை வைத்திருக்கிறார். வரம்பு மீறி உங்களுடைய தான்தோன்றித்தனமான பேச்சால், முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்காததால்தான் இன்றைக்கு பெரிய பாதிப்பை நீங்கள் சந்திக்க வேண்டி இருக்கிறது. இவ்வாறு கூறினார்.