/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
சாலையோரங்களில் குப்பை குவிப்பதை தடுக்க நடவடிக்கை என்ன; அரசுக்கு உயர்நீதிமன்றம் நோட்டீஸ்

ADDED : டிச 14, 2024 05:56 AM
மதுரை : மதுரையில் சாலையோரங்களில் குப்பையை குவிக்க தடுக்க மேற்கொண்ட நடவடிக்கை குறித்து தமிழக அரசு அறிக்கை தாக்கல் செய்ய உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டது.
மதுரை சரவணன் தாக்கல் செய்த பொதுநல மனு: மதுரை மாநகராட்சி, ஒத்தக்கடை, புதுத்தாமரைப்பட்டி, கருப்பாயூரணி உலகனேரி ஊராட்சி பகுதிகளில் குப்பை சேகரிக்கப்படுகிறது. அவற்றை சிட்டம்பட்டி நான்குவழிச்சாலை டோல்கேட் முதல் கருப்பாயூரணி டோல்கேட் வரை இருபுறமும் குவிக்கின்றனர்.
திடக்கழிவு மேலாண்மை விதிகளை உள்ளாட்சி அமைப்புகள் மீறுகின்றன.
இதனால் மக்கள், கால்நடைகளுக்கு நோய்கள் பரவும் அபாயம் உள்ளது. விதிகள்படி கழிவுகளை அகற்றுவதற்குரிய வசதிகளை ஏற்படுத்த வேண்டியது கிராமம், நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளின் கடமை. சிட்டம்பட்டி முதல் கருப்பாயூரணி டோல்கேட் வரை குப்பையை குவிக்க தடை விதிக்க வேண்டும்.
தமிழகத்தில் அனைத்து கிராம, நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகள் திடக்கழிவு மேலாண்மை விதிகளை பின்பற்றுவதை உறுதி செய்யக்கோரி அரசுக்கு மனு அனுப்பினேன். நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும். இவ்வாறு குறிப்பிட்டார்.
நீதிபதிகள் எம்.எஸ்.ரமேஷ், ஏ.டி.மரியா கிளீட் அமர்வு: சாலையோரங்களில் குப்பையை குவிக்க தடுக்க மேற்கொண்ட நடவடிக்கை குறித்து தமிழக நகர்ப்புற மற்றும் உள்ளாட்சி நிர்வாகத்துறை முதன்மைச் செயலர், மதுரை கலெக்டர் ஜன.3 ல் அறிக்கை தாக்கல் செய்ய நோட்டீஸ் அனுப்பப்படுகிறது. இவ்வாறு உத்தரவிட்டனர்.