/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
தினமும் 150 டன் பொருட்கள் ஏற்றுமதியாகும் மதுரையில் கார்கோ விமான சேவை எப்போது
/
தினமும் 150 டன் பொருட்கள் ஏற்றுமதியாகும் மதுரையில் கார்கோ விமான சேவை எப்போது
தினமும் 150 டன் பொருட்கள் ஏற்றுமதியாகும் மதுரையில் கார்கோ விமான சேவை எப்போது
தினமும் 150 டன் பொருட்கள் ஏற்றுமதியாகும் மதுரையில் கார்கோ விமான சேவை எப்போது
ADDED : நவ 16, 2025 04:27 AM
மதுரை: மதுரை, சுற்றியுள்ள மாவட்டங்களில் இருந்து தினமும் 150 டன் அளவிற்கு காய்கறி, பழங்கள், உணவுப்பொருட்கள் ஏற்றுமதி செய்யப்படுவதால் மதுரை விமான நிலையத்தில் கார்கோ விமான சேவையை கொண்டு வரவேண்டும்.
ஏ.டி.ஆர்., ரக (சிறிய) பயணிகள் விமானத்தில் அதிகபட்சமாக 2 டன் அளவு வரையும்
போயிங், ஏர்பஸ் போன்ற விமானங்களில் 15 டன் கொள்ளளவு வரை சரக்குகளை (கார்கோ சேவை) ஏற்றுமதிக்காக கொண்டு செல்லமுடியும்.
மதுரையில் தனி கார்கோ விமான சேவை இயக்கும் அளவிற்கு வாய்ப்புகள் உள்ளதால் தனி கார்கோ சேவையை அறிமுகப்படுத்த வேண்டும் என்கிறார் தமிழ்நாடு தொழில் வர்த்தக சங்கத் தலைவர் ஜெகதீசன்.
அவர் கூறியதாவது:
மதுரையில் பூக்கள், காய்கறிகள், பழங்கள், பதப்படுத்தப்பட்ட உணவுகள், தென் மாவட்டங்களில் இருந்து இறால் உட்பட கடல் உணவுகள், ஸ்ரீவில்லிபுத்துார் பால்கோவா வரை தினமும் 150 டன் அளவிற்கு பொருட்கள் ஏற்றுமதியாகிறது.
அடிக்கடி விமான சேவை இருந்தால் தான் மதுரையில் இருந்து சரக்குகளை ஏற்றுமதிக்கு கொண்டு செல்ல முடியும்.
பெரும்பாலும் இவை சீக்கிரமே அழுகக்கூடிய பொருட்கள் என்பதால் தாமதமின்றி ஏற்றுமதி செய்ய வேண்டும். இதுவரை கார்கோ சேவைக்கென தனி விமானம் மதுரையில் இருந்து இயக்கவில்லை.
வேளாண் உணவுப் பொருட்கள் அனுப்ப வேண்டுமெனில் அபெடா எனப்படும் வேளாண் ஏற்றுமதி முகமையில் பதிவு செய்ய வேண்டும். இப்படி ஒவ்வொரு பொருட்களையும் பதிவு செய்வதற்கு தனித்தனி முகமை உள்ளது.
அதில் ஏற்றுமதியாளர்கள் தங்களை பதிவு செய்து கொண்டால் போதும். வேளாண் பொருட்களுக்கு மட்டும் 'பிளான்ட் கோரன்டைன்' அலுவலக சான்று வேண்டும்.
மதுரையில் அதற்கான வசதியுள்ளது. எனவே சோதனை அடிப்படையில் மதுரை விமான நிலையத்தில் கார்கோ விமான சேவையை துவக்க வேண்டும் என்றார்.

