ADDED : அக் 21, 2025 03:49 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பேரையூர்: பேரையூர் பேரூராட்சியில் ரூ. 1.50 கோடியில் கட்டப்பட்ட மின் மயானத்தை பயன்பாட்டுக்கு திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் எதிர்பார்க்கின்றனர்.
பேரையூரில் இறந்தோரை எரியூட்டும் மின் மயானம் இல்லாமல் இருந்தது. இதனால் மின் மயானம் அமைக்க கோரிக்கை எழுந்தது. மயானத்துக்கு அருகே மின் மயானம் 2023 ஆம் ஆண்டு ரூ.1.50 கோடி மதிப்பில் கட்டப்பட்டது. இந்தப் பணி முடிந்து 2 ஆண்டுகள் ஆகியும் திறக்கப்படாமல் உள்ளது.
தற்போது மழைக்காலம் என்பதால் இறந்தவர்களின் உடல்களை விறகு மூலம் எரியூட்டுவதில் சிரமம் ஏற்பட்டுள்ளது. மின் மயானத்தை திறக்க வேண்டும் என, பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். பேரூராட்சி நிர்வாகம் உடனே நடவடிக்கை எடுக்க வேண்டும்.