/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
எப்போ 3 மாத சம்பளம் தருவீங்க... அலைக்கழிக்கப்படும் தொழிலாளர்கள்
/
எப்போ 3 மாத சம்பளம் தருவீங்க... அலைக்கழிக்கப்படும் தொழிலாளர்கள்
எப்போ 3 மாத சம்பளம் தருவீங்க... அலைக்கழிக்கப்படும் தொழிலாளர்கள்
எப்போ 3 மாத சம்பளம் தருவீங்க... அலைக்கழிக்கப்படும் தொழிலாளர்கள்
ADDED : மார் 04, 2024 05:40 AM
பேரையூர்: டி.கல்லுப்பட்டி, சேடப்பட்டி ஒன்றியங்களில் தேசிய ஊரக வேலை உறுதித் திட்ட பணியாளர்களுக்கு மூன்று மாதங்களாக சம்பளம் வழங்காததால் பாதிக்கப்படடுள்ளனர்.
டி.கல்லுப்பட்டி ஒன்றியத்தில் 42 ஊராட்சிகளும், சேடபட்டி ஒன்றியத்தில் 31 ஊராட்சிகளிலும் தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தில் கண்மாய், வரத்துக் கால்வாய் சீரமைப்பு பணிகள் நடக்கின்றன. இதில் வேலை பார்க்கும் தொழிலாளர்களுக்கு மூன்று மாதங்களாக சம்பளம் வழங்க வில்லை.
இப்பகுதியில் விவசாயம் பொய்த்து போய்விட்டது. அது சார்ந்த கூலி வேலையும் கிடைக்காத நிலையில், இந்தச் சம்பளத்தை மட்டுமே நம்பி இருந்த கிராமத்தினர் அவதிக்கு ஆளாகின்றனர். இந்த பணியாளர்கள் தினமும் ஊராட்சி மற்றும் ஒன்றிய அலுவலகங்களுக்கு நடையாய் நடந்து சம்பளம் எப்ப வரும் என்று கேட்டுச் செல்வது பரிதாபமாக உள்ளது. இதற்கு பதில் அளிக்க முடியாமல் ஊராட்சித் தலைவர்கள், அதிகாரிகள் நழுவி விடுகின்றனர். தேசிய ஊரக வேலை உறுதித் திட்ட பணியாளர்களுக்கு சம்பளம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.