/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
ரவுடி வெள்ளைக்காளியை 'என்கவுன்டர்' செய்யக்கூடாது என மனைவி கோர்ட்டில் மனு

ADDED : ஏப் 22, 2025 05:44 AM
மதுரை: ரவுடி வெள்ளைக்காளியை 'என்கவுன்டர்' செய்ய கூடாது என அவரது மனைவி உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனு மீது 4 வாரத்தில் மதுரை போலீஸ் எஸ்.பி., பதில் அளிக்க வேண்டும் என உயர்நீதிமன்றம் மதுரைக் கிளை உத்தரவிட்டது.
திருச்சி குண்டூர் பர்மா காலனியை சேர்ந்த திவ்யா தாக்கல் செய்த மனு: என் கணவர் வெள்ளைக் காளி 2019 முதல் சென்னை புழல் சிறையில் சிறையில் தண்டனை அனுபவித்து வருகிறார். மார்ச் 22ல் காளி என்ற காளீஸ்வரன் மதுரையில் கொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் கணவரின் நண்பர் சுபாஷ் சந்திரபோஸ் சேர்க்கப்பட்டு, அவரை போலீசார் 'என்கவுன்டர்' செய்தனர்.
காளி கொலை வழக்கில் என் கணவர் பெயரையும் சேர்த்துள்ளனர். என் கணவரை விசாரணைக்காக அழைத்துச் சென்று என்கவுன்டரில் கொலை செய்ய அதிகம் வாய்ப்புள்ளது. என் கணவரை என்கவுன்டர் செய்யக்கூடாது என மதுரை போலீஸ் எஸ்.பி.,க்கு மனு அனுப்பினேன். எனக்கு 4 வயதில் மகள் உள்ளார்.
இதனால் என் மனுவை பரிசீலித்து என் கணவரை என்கவுன்டர் செய்யக் கூடாது என உத்தரவிட வேண்டும் என தெரிவிக்கப்பட்டது.
மனுவை விசாரித்த நீதிபதி தனபால், மதுரை எஸ்.பி., மனுதாரரின் மனுவை பரிசீலித்து 4 வாரத்தில் உரிய உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என உத்தரவிட்டார்.