/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
அரசு மருத்துவக்கல்லுாரிகளில் 'பெயின் மெடிசின் பெல்லோஷிப்' டி.எம்.இ., முயற்சி செய்யுமா
/
அரசு மருத்துவக்கல்லுாரிகளில் 'பெயின் மெடிசின் பெல்லோஷிப்' டி.எம்.இ., முயற்சி செய்யுமா
அரசு மருத்துவக்கல்லுாரிகளில் 'பெயின் மெடிசின் பெல்லோஷிப்' டி.எம்.இ., முயற்சி செய்யுமா
அரசு மருத்துவக்கல்லுாரிகளில் 'பெயின் மெடிசின் பெல்லோஷிப்' டி.எம்.இ., முயற்சி செய்யுமா
ADDED : நவ 07, 2025 05:51 AM
மதுரை: தமிழக அரசு மருத்துவக் கல்லுாரிகளில் 'ரீஜெனரேட்டிவ்' சிகிச்சையை ஊக்கப்படுத்தும் வகையில் 'பெயின் மெடிசின் பெல்லோஷிப்' படிப்புக்கு மருத்துவ கல்வி இயக்குனரகம் (டி.எம்.இ.,) முயற்சி செய்ய வேண்டும்.
வலி நீக்கியல் (பெயின் கிளினிக்) சிகிச்சையானது நுாறாண்டு காலமாக இந்தியாவில் நடைமுறையில் இருந்தாலும் ஐந்தாண்டுகளாக பிரபலமடைந்து வருகிறது. முதுநிலை படிப்பான எம்.டி., முடித்தபின் மூன்றாண்டு கால டி.எம்., (பெயின் கிளினிக்) படிப்பு ரிஷிகேஷில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனையில் மட்டுமே உள்ளது. மத்திய அரசின் எய்ம்ஸ் மருத்துவமனைகளில் மட்டுமே டி.எம்., பெயின் கிளினிக் படிப்புகளுக்கு முன்னுரிமை அளிக்கப்படும். அதற்கு பதிலாக மருத்துவ அறிவியலுக்கான தேசிய கல்வி வாரியத்தின் கீழ் இரண்டாண்டு கால டிப்ளமோ படிப்பாக 'பெல்லோ ஆப் நேஷனல் போர்டு' (எப்.என்.பி.,) 'பெயின் கிளினிக்' பாடத்திட்டம் நடத்தப்படுகிறது.
சென்னை ஓமந்துாரார் அரசு மருத்துவமனையில் மட்டுமே இப்படிப் புக்கு தற்போது அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இங்கு 'ரீஜெனரேடிவ்' சிகிச்சை முறையும் செயல்படுகிறது. அதற்கான 'ஸ்டெம் செல்'ஆய்வகமும்உள்ளது.
இரண்டாண்டுகளுக்கு முன்பே மதுரை, திருநெல்வேலி, கோவை, திருச்சி அரசு மருத்துவமனைகளில் 'பெயின் கிளினிக் பெல்லோஷிப்' துவங்குவதற்கு திட்டமிடப்பட்ட நிலையில், தற்போது வரை அதற்கான முயற்சிகள் தொடரவில்லை. எம்.டி., எம்.எஸ்., படிக்கும் முதுநிலை டாக்டர்களுக்கு ஊக்கத்தொகை வழங்குவது போல இப்பாடத்திற்கும் ஊக்க த்தொகை வழங்க வேண்டும். இதை கணக்கிட்டே படிப்பை கொண்டு வர காலம் தாழ்த்துவதாக அரசு டாக்டர்கள் தெரிவிக்கின்றனர்.
முயற்சிக்க வேண்டும் அவர்கள் கூறியதாவது:
புற்றுநோயாளிகள், புற்றுநோய் அல்லாத நாள்பட்ட நோயால் தவிப்பவர்களுக்கு வலிநீக்கியல் சிறப்பு நிபுணர்கள் மூலம் சிகிச்சை அளிப்பது சிகிச்சையின் தரத்தை மேம்படுத்தும். தகுதிவாய்ந்த எம்.டி. டாக்டர்கள் தமிழகத்தில் அதிகம். சிகிச்சைக்கு காத்திருக்கும் நோயாளிகள் அதிகம், அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனைகளில் உள்கட்டமைப்பு வசதிகள் உள்ளன. 'பெல்லோஷிப்' படிப்புக்கு மருத்துவ கல்வி இயக்குனரகம் மூலம் எளிதில் அனுமதி பெறலாம். எனவே தாமதமின்றி பழைய அரசு மருத்துவக் கல்லுாரிகளில் இப்பாடத்திட்டத்தை கொண்டு வர இயக்குனரகம் மீண்டும் முயற்சிக்க வேண்டும் என்றனர்.

