/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
நடுமுதலைக்குளம் பள்ளிப்பாதை சீரமைக்கப்படுமா
/
நடுமுதலைக்குளம் பள்ளிப்பாதை சீரமைக்கப்படுமா
ADDED : ஆக 29, 2025 03:48 AM

சோழவந்தான்: சோழவந்தான் அருகே நடு முதலைக்குளம் நடுநிலைப் பள்ளிப் பாதையை சீரமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர்.
அப்பகுதியைச் சேர்ந்த திவாகர் கூறியதாவது: இங்கு ஒரே வளாகத்தில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி, அங்கன்வாடி மையம் செயல்படுகிறது. ஏராளமான குழந்தைகள், மாணவர்கள் பயில்கின்றனர். சில மாதங்களுக்கு முன்பு 'பேவர் பிளாக்' பதிக்கும் பணிகள் நடந்தது.
பள்ளியின் உள்ளேயும், வெளியேயும் கற்கள் பதித்து நன்றாக உள்ளது.
ஆனால் பள்ளி நுழைவாயிலில் 'பேவர் பிளாக்' பதிக்கப்படாமலும், சிமென்ட் தளம் அமைக்காமலும் சரளை மண்ணால் பாதை அமைக்கப்பட்டுள்ளது. இதில் கூர் முனையுடன், காயம் ஏற்படுத்துமளவு கற்கள் நிறைந்துள்ளன. இதில் மாணவர்கள் இடறி விழுந்து காயமடைகின்றனர். மாற்றுத்திறனாளி மாணவர்கள் சரளைப் பாதையில் நடக்க சிரமம் அடைகின்றனர். அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.