sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

மதுரை

/

விவசாயிகளை ஏமாற்றும் தமிழக அரசு நெல்லுக்கு சொன்ன சொல்லால் ஓட்டு பாதிக்குமா

/

விவசாயிகளை ஏமாற்றும் தமிழக அரசு நெல்லுக்கு சொன்ன சொல்லால் ஓட்டு பாதிக்குமா

விவசாயிகளை ஏமாற்றும் தமிழக அரசு நெல்லுக்கு சொன்ன சொல்லால் ஓட்டு பாதிக்குமா

விவசாயிகளை ஏமாற்றும் தமிழக அரசு நெல்லுக்கு சொன்ன சொல்லால் ஓட்டு பாதிக்குமா


ADDED : மே 17, 2025 01:08 AM

Google News

ADDED : மே 17, 2025 01:08 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மதுரை: ஆட்சியை பிடிப்பதற்காக அள்ளி வாக்குறுதி வழங்கிய தி.மு.க., அரசு நான்காண்டுகளை கடந்த நிலையிலும் நெல்லுக்குரிய விலை வழங்கப்படும் என்று சொன்ன சொல்லை காப்பாற்றவில்லை. திராவிட மாடல் என்று பெருமை பேசும் முதல்வர் ஸ்டாலின், இந்த விஷயத்தில் வடமாநிலங்களை பார்த்து பாடம் படிக்க வேண்டும் என்று தெரிவிக்கின்றனர் விவசாயிகள்.

மத்திய அரசின் புள்ளி விவரப்படி 2001க்கு பிறகு தமிழகத்தில் நெற்பயிர் சாகுபடி செய்த விவசாயிகள் மூன்றாண்டுகள் மட்டுமே லாபமும் மற்ற ஆண்டுகளில் தொடர்ச்சியாக நஷ்டமும் அடைந்துள்ளனர். குவிண்டால் நெல்லுக்கு ரூ.2320 என மத்திய அரசு கொடுக்கிற குறைந்தபட்ச ஆதார விலை இந்தியா முழுவதற்கும் பொதுவானது. மாநிலங்களைப் பொறுத்தவரை உற்பத்திச் செலவில் நிறைய மாறுபாடுகள் உள்ளன. தொழிலாளர்கள் கிடைக்கக்கூடிய இடங்களில் குறைந்தபட்ச கூலி சாத்தியமாகிறது. தமிழகத்தில் கூலி இருமடங்காக அதிகரித்து விட்டது. இந்திய அளவில் ஒட்டுமொத்த நெல் உற்பத்தியில் 8.62 சதவீதமாக இருந்த தமிழகத்தின் பங்களிப்பு 5.64 சதவீதமாக குறைந்துள்ளது.

இதுகுறித்து விவசாயிகள் கூறியதாவது:

இந்தியப்பொருளாதாரத்தில் முதலிடம் வகிக்கும் தமிழகத்தில் விவசாயிகள் வருமானம் 22வது இடத்தில் உள்ளது. அரசு விவசாயத்தை புறக்கணிப்பதையே இக்குறியீடு உணர்த்துகிறது. நெல்லுக்கு குவிண்டாலுக்கு ரூ.3500 இல்லாமல் தமிழகத்தில் நெல் சாகுபடி செய்ய முடியாத சூழல் உள்ளது.

தமிழகத்தின் பங்கு என்ன


2021 சட்டசபை தேர்தல் அறிக்கையில் நெல் குவிண்டாலுக்கு ரூ. 2500 வழங்கப்படும் என தி.மு.க., தெரிவித்தது. அதே 2021ல் மத்திய அரசு வழங்கி வந்த குறைந்தபட்ச ஆதார விலை குவிண்டாலுக்கு ரூ. 1888 தான். ஆண்டுதோறும் உயர்த்தி தற்போது ரூ. 2320 ஆக அதிகரித்துள்ளது. அடுத்தாண்டு ரூ.2500 ஐ எட்டி விடும். முதல்வர் ஸ்டாலின் அறிவித்த ரூ.2500 அறிவிப்பு இதுவரை சாத்தியமாகவில்லை.

ஒடிசாவில் நெல்லின் உற்பத்திச்செலவு ஒரு ஏக்கருக்கு ரூ.17ஆயிரம், சட்டிஸ்கரில் ரூ. 24ஆயிரம் ஆகிறது. அம்மாநில அரசுகள் குவிண்டாலுக்கு ரூ.780 ஊக்கத்தொகை வழங்குவதால் அங்குள்ள விவசாயிகளுக்கு குவிண்டாலுக்கு ரூ. 3100 விலை கிடைக்கிறது. தமிழகத்தில் விவசாயக்கூலி உயர்வு காரணமாக உற்பத்திச் செலவு ரூ. 36ஆயிரமாக உள்ளது. தமிழக அரசு தன் பங்காக ரூ.105 தான் ஊக்கத்தொகையாக தருகிறது. ஊக்கத்தொகையாக ரூ. 1180 சேர்த்து குவிண்டால் நெல்லுக்கு ரூ. 3500 வழங்க வேண்டும். இல்லாவிட்டால் ஒட்டுமொத்த விவசாயிகளும் வரும் சட்டசபை தேர்தலில் பாடம் புகட்டுவார்கள் என்றனர்.






      Dinamalar
      Follow us