/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
ரூ.40 லட்சம் கேட்டு ஆள் கடத்திய பெண் கைது
/
ரூ.40 லட்சம் கேட்டு ஆள் கடத்திய பெண் கைது
ADDED : பிப் 15, 2024 05:47 AM
மதுரை: மதுரையில் ரூ.40 லட்சம் கேட்டு பெரியப்பாவை கூலிப்படை மூலம் கடத்திய பாண்டீஸ்வரி 31, கைது செய்யப்பட்டார்.
மதுரை கூடல்நகர் சொக்கலிங்க நகர் பழனிசாமி 53. டீ கடை உரிமையாளர். நேற்றுமுன்தினம் அதிகாலை 6 பேர் கொண்ட கும்பலால் காரில் கடத்தப்பட்டார். ரூ.40 லட்சம் கேட்டு மிரட்டிய நிலையில் மூவர் கைது செய்யப்பட்டனர். மூவர் தப்பினர். விசாரணையில் பணத்திற்காக தேனி மயிலாடும்பாறை பாண்டீஸ்வரி துாண்டுதலில் கூலிப்படையாக செயல்பட்டது தெரிந்தது. அவர் கைது செய்யப்பட்டார்.
போலீசார் கூறியதாவது: பழனிசாமியின் தம்பி மகள்தான் பாண்டீஸ்வரி. மயிலாடும்பாறையில் வீடு கட்டி வருகிறார். இதில் ரூ.20 லட்சம் கடன் உள்ளது. பழனிசாமி வசதியாக இருப்பதால் அவரை கடத்தி பணம் கேட்க திட்டமிட்டார். இதற்காக வீட்டருகே உள்ள குணசேகரை அணுகினார். இவருக்கு ஏற்கனவே பாண்டீஸ்வரி சிலரிடம் கடன் வாங்கிக்கொடுத்துள்ளார். ரூ.40 லட்சம் கிடைத்தால் அதில் குறிப்பிட்ட தொகை தருவதாக குணசேகரிடம் கூறியுள்ளார். இதைதொடர்ந்து குணசேகர் தனது நண்பர்கள் 5 பேருடன் வாடகை காரில் மதுரை வந்து பழனிசாமியை கடத்தி உள்ளார் என்றனர்.

