/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
'பைப்ராய்டு' கட்டியுடன் குழந்தை பெற்ற பெண்; வேலம்மாள் மருத்துவமனையில் சாதனை

ADDED : ஜூலை 09, 2025 06:39 AM
மதுரை : மதுரை வேலம்மாள் மருத்துவக் கல்லுாரி மருத்துவமனை மற்றும் ஆராய்ச்சி மையத்தில் கர்ப்பிணியின் கருப்பையில் இருந்த 1.8 கிலோ பைப்ராய்டு கட்டியை அகற்றி ஆண் குழந்தையை அறுவை சிகிச்சை மூலம் எடுத்து டாக்டர்கள் சாதனை படைத்தனர்.
வேலம்மாள் கல்விக் குழுமத் தலைவர் முத்துராமலிங்கம் கூறியதாவது:
வெளிநாட்டில் வசிக்கும் 23 வயதான 5 மாத கர்ப்பிணியின் கர்ப்பப்பையில் பெரிய அளவு 'பைப்ராய்டு' (தசை நார் கட்டி) இருந்ததால் கருக்கலைப்பு ஆலோசனை பெற வந்தார். கட்டியின் அளவு பெரிதாக இருந்ததால் குறைப்பிரசவம், கருச்சிதைவு போன்றவற்றிற்கு வாய்ப்பு இருந்தது.
எனவே கருக்கலைப்பு செய்யாமல் தொடர் மருத்துவ கண்காணிப்பு அளிக்கப்பட்டது. நிறைமாதத்தில் அறுவை சிகிச்சை மூலம் 2.6 கிலோ எடையுள்ள ஆண் குழந்தை பெற்றெடுத்தார். அதேநேரத்தில் 1.8 கிலோ அளவுள்ள கட்டியையும் டாக்டர்கள் அகற்றினர்.
மகப்பேறு மருத்துவத்துறைத் தலைவர் சித்ரா, டாக்டர்கள் ராஜகீர்த்தனா, சக்திபிரியா, அகிலா, மயக்கவியல் துறை டாக்டர்கள் கணேஷ் பிரபு, மகேஸ்வரி, சித்ராதேவி, பாலாஜி ஆகியோர் அறுவை சிகிச்சைக்கு உதவினர். தாயும் சேயும் நலமாக உள்ளனர் என்றார்.