/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
எம்.எல்.ஏ.,வை முற்றுகையிட்ட பெண்கள்
/
எம்.எல்.ஏ.,வை முற்றுகையிட்ட பெண்கள்
ADDED : ஆக 19, 2025 01:08 AM
சோழவந்தான்; கச்சிராயிருப்பு அருகே சிவநாதபுரத்தில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் கட்டப்பட்ட உணவு தானிய கிட்டங்கி, ரேஷன் கடை திறப்பு விழாவிற்கு எம்.எல்.ஏ.,வெங்கடேசன் வந்தார். அவரை அப்பகுதி பெண்கள் முற்றுகையிட்டு சாக்கடை கால்வாய் சரியான முறையில் அமைக்கப்படாததால் கழிவு நீர் செல்ல முடியாமல் ஆங்காங்கே குடியிருப்புகளுக்குள் குளம் போல தேங்கி நிற்கிறது. அதிகாரிகளிடம் புகார் கூறியும் பலனில்லை என்றனர். அதிகாரிகளை கண்டித்த எம்.எல்.ஏ., 'விரைவில் சரி செய்யப்படும்' என்றார்.
தாசில்தார் ராமச்சந்திரன், கூட்டுறவு சார்பதிவாளர் அழகர்சாமி, பி.டி.ஓ.,க்கள் லட்சுமி காந்தம், கிருஷ்ணவேணி, பேரூராட்சி தலைவர் ஜெயராமன் கலந்து கொண்டனர்.

