/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
மாற்றுத்திறனாளிகளுக்கான ‛மினி ஸ்டேடிய பணி துவக்கம்
/
மாற்றுத்திறனாளிகளுக்கான ‛மினி ஸ்டேடிய பணி துவக்கம்
மாற்றுத்திறனாளிகளுக்கான ‛மினி ஸ்டேடிய பணி துவக்கம்
மாற்றுத்திறனாளிகளுக்கான ‛மினி ஸ்டேடிய பணி துவக்கம்
ADDED : ஜன 30, 2025 05:42 AM
மதுரை: மதுரை ரேஸ்கோர்ஸ் மைதானத்தில் ரூ.ஒருகோடி மதிப்பில் மாற்றுத் திறனாளிகளுக்கான மினி ஸ்டேடியம்' அமைப்பதற்கான பணிகள் துவங்கின.
மதுரை ரேஸ்கோர்ஸ் மைதானத்தில் ஒலிம்பிக் அகாடமி என்ற பெயரில். ரூ.6 கோடியில் கபடி, டேபிள் டென்னிஸ் புதிய அரங்கு, உடற்பயிற்சி கூட அரங்கு கட்டும் பணி நடக்கிறது. இந்த நிதியின் கீழ் கூடைபந்து, டென்னிஸ் நான்கு அரங்குகள் சீரமைக்கும் பணியும் நடக்கிறது.
சிறிய செயற்கை ஹாக்கி மைதானத்தை ஒட்டி மாற்றுத்திறனாளிகளுக்காக 'மினி ஸ்டேடியம்' அமைக்கும் பணி துவங்கியுள்ளது. இதற்காக ரூ.ஒருகோடி ஒதுக்கப்பட்டுள்ளது. முழுமையான கட்டடமாக இல்லாமல் தரைத்தளம், நான்கு பக்கமும் சிறிய அளவில் சுவர், மேற்பகுதியுடன் கட்டப்பட்டு வருகிறது. இதில் தேவைக்கேற்ப வாள்சண்டை, பாட்மிண்டன் என போட்டிகளை நடத்தமுடியும். பார்வையாளர் காலரி இல்லாமல் கழிப்பறைகளுடன் கட்ட திட்டமிடப்பட்டுள்ளது.
நெருக்கடியான இடம்
'மினி ஸ்டேடியம்' கட்டப்படும் இடத்தருகே மைதானத்தின் பின்புற கேட் செல்கிறது. அவசர காலத்திலோ, விபத்து ஏற்பட்டாலோ முன்புற வாயிலுக்கு பதிலாக சிறிய செயற்கை ஹாக்கி அரங்கு வழியாக வாகனங்கள் பின்புற கேட்டில் வெளியேறலாம். 'மினி ஸ்டேடியம்' அமைக்கும் இடத்தில் தற்போது தான் அடித்தளத்திற்கான வானம் தோண்டும் பணிகள் நடக்கிறது. கட்டடம் அமைக்கப்பட்ட பின் ஒரு கார் மட்டுமே சென்று வரும் அளவுக்கு இடநெருக்கடி ஏற்படும் என்பதால் அதிகாரிகள் பாதைப் பகுதியை மறுஆய்வு செய்து அதற்கேற்ப 'மினி ஸ்டேடியத்தை' கட்ட வேண்டும்.

