/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
செயலர்கள் இல்லாத 2 ஆயிரம் ஊராட்சிகளில் பணிகள் தொய்வு
/
செயலர்கள் இல்லாத 2 ஆயிரம் ஊராட்சிகளில் பணிகள் தொய்வு
செயலர்கள் இல்லாத 2 ஆயிரம் ஊராட்சிகளில் பணிகள் தொய்வு
செயலர்கள் இல்லாத 2 ஆயிரம் ஊராட்சிகளில் பணிகள் தொய்வு
ADDED : பிப் 12, 2025 11:25 PM

மதுரை: 'செயலர்கள் இல்லாத 2 ஆயிரம் ஊராட்சிகளில் அடிப்படை கட்டமைப்பு பணிகளில் சுணக்கம் ஏற்பட்டுள்ளதால் அப்பணியிடங்களை உடனே நிரப்ப வேண்டும்' என ஊரக வளர்ச்சித்துறை அனைத்து பணியாளர் சங்கத்தினர் வலியுறுத்துகின்றனர்.
தமிழகத்தில் 12 ஆயிரத்து 525 ஊராட்சிகள் உள்ளன. 9 மாவட்டங்களைத் தவிர மற்ற மாவட்டங்களில் கிராமப்புற உள்ளாட்சி பிரதிநிதிகளின் பதவிகாலம் டிசம்பருடன் முடிவுக்கு வந்தது. பி.டி.ஓ.,க்கள் சிறப்பு அதிகாரிகளாக பொறுப்பேற்றுள்ளனர். ஊராட்சி தலைவர்கள் இல்லாத நிலையில் அங்குள்ள செயலர்கள் பணிகளை செயல்படுத்துகின்றனர்.
தற்போது தமிழகத்தில் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஊராட்சிகளில் செயலர் பணியிடங்கள் காலியாக உள்ளன.
குடிநீர் வினியோகம், தெருவிளக்கு பராமரிப்பு, வடிகால் சுத்தம் செய்தல், கிராம சபை கூட்டம் நடத்த ஏற்பாடு செய்வதும் இவர்களே. இந்த பணியிடங்களை உடனே நிரப்ப வேண்டும் என ஊரக வளர்ச்சித்துறை அனைத்துப் பணியாளர் சங்க மாநில தலைவர் சார்லஸ், பொதுச் செயலாளர் ரவி, ஒருங்கிணைப்பாளர் குமரேசன், பொருளாளர் பெரியசாமி வலியறுத்தினர்.
அவர்கள் கூறியதாவது: ஊராட்சி செயலர், துாய்மைப் பணியாளர் காலியிடங்களை நிரப்ப வேண்டும். செயலர்களுக்கு பி.டி.ஓ.,க்கள் மூலம் வழங்க வேண்டும். ஊராட்சிகளில் இரவு, பகலாக பணியாற்றும் குடிநீர் மேல்நிலை தொட்டி இயக்குனர்களுக்கு சிறப்பு காலமுறை ஊதியம், ஓய்வூதியம் வழங்க வேண்டும். துாய்மை காவலர்களுக்கு ரூ.10 ஆயிரம், கணினி இயக்குனர்களுக்கு ரூ.25 ஆயிரம் சம்பளம் வழங்குவதுடன், நுாறுநாள் வேலை திட்டத்திற்கு தனி பி.டி.ஓ., வேண்டும் என்றனர்.

