ADDED : செப் 26, 2025 03:43 AM
மதுரை: மதுரை கோட்ட ரயில்வே நிர்வாகத்திடம் எஸ்.ஆர்.எம்.யு., சார்பில் புதிய பணிப்பட்டியல் வழங்கப்பட்டது.
நேற்று ஓட்டுநர்களுக்கு போதிய ஓய்வு, பணி ஒதுக்கீடு வழங்குவது தொடர்பாக சங்கத்தின் ஓடும் தொழிலாளர்கள் பிரிவு சார்பில் உள்ளிருப்பு போராட்டம் நடந்தது. நிர்வாகம் தரப்பில் பேச்சுவார்த்தைக்கு அழைப்பு விடுக்கப்பட்ட நிலையில் தற்காலிகமாக ஒத்தி வைக்கப்பட்டது.
நேற்று மதியம் நடந்த பேச்சுவார்த்தையில் நிர்வாகம் சார்பில் உதவி கோட்ட மேலாளர் ராவ், ஊழியர் நல அதிகாரி சங்கரன் ஆகியோர் பங்கேற்றனர்.
சங்கம் சார்பில் கோட்ட செயலாளர் ரபீக், உதவி செயலாளர் ராம்குமார், ஓடும் தொழிலாளர் பிரிவு செயலாளர் அழகுராஜா, தலைவர் ரவிசங்கர், முன்னாள் கோட்ட தலைவர் தாமரை செல்வன், நிர்வாகிகள் பேச்சிமுத்து, நித்தியராஜ், லெனின் பங்கேற்றனர்.
சங்கம் சார்பில் ஓடும் தொழிலாளர்களுக்கான பணிப்பட்டியல் வழங்கப்பட்டது. அதனை 3 நாட்களுக்குள் சரி பார்த்து அறிக்கை சமர்ப்பிக்க உதவி கோட்ட மேலாளர் உத்தரவிட்டார்.