/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
மதுரை காஞ்சி மடத்தில் டிச.27 ல் ஆராதனை
/
மதுரை காஞ்சி மடத்தில் டிச.27 ல் ஆராதனை
ADDED : டிச 25, 2024 04:23 AM
மதுரை : சொக்கிகுளம் பெசன்ட் ரோட்டில் உள்ள காஞ்சி காமகோடி மடம் மதுரை கிளையில் மஹாபெரியவரின் 31வது வார்ஷிக ஆராதனை டிச.27ல் நடக்கிறது.
அன்று காலை குரு வந்தனம், விக்னேஸ்வர பூஜை, அனுக்ஞை, சங்கல்பத்துடன் பூஜைகள் துவங்குகின்றன.
தொடர்ந்து மஹன்யாசம், ருத்ரைகாதசினி ஜபம், ேஹாமங்கள் நடந்து மஹா பெரியவர் விக்ரகத்திற்கு அபிேஷகம் நடக்கிறது. தீபாராதனைக்குப்பின் அன்னதானம் வழங்கப்படும்.
பூஜையின்போது பாலாமணி ஈஸ்வர் குழுவினரின் தியாகராஜ சுவாமிகளின் பஞ்சரத்ன கீர்த்தனைகள் கோஷ்டி கானம் நடக்கும்.
மாலை 6:30 மணிக்கு குரு மகிமை என்ற தலைப்பில் நித்யாக்னிஹோத்ரி முசிறி யக்ஞராம சோமயாஜி பேசுகிறார்.
டிச.28 ல் மஹா பெரியவரின் ஜன்ம நட்சத்திரத்தை முன்னிட்டு அனுஷ விழா நடக்கிறது. மாலை 4:30 மணி முதல் வேத பாராயணமும், 5:30 மணிக்கு மஹா பெரியவர் விக்ரகத்திற்கு அபிேஷக, ஆராதனைகளும் நடக்கின்றன.
மாலை 6:30 மணிக்கு மஹா பெரியவர் பற்றி ரேவதி சுப்புலட்சுமியின் சொற்பொழிவு நடக்கிறது. ஏற்பாடுகளை மடத்தின் நிர்வாகிகள் செய்துள்ளனர்.

