ADDED : மார் 27, 2025 04:49 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மதுரை: பள்ளிசாரா மற்றும் வயது வந்தோர் கல்வி இயக்கம் சார்பாக கைதிகளுக்கான சிறப்பு எழுத்தறிவு திட்டம் கடந்த செப்.,ல் துவங்கப்பட்டது.
மதுரை சிறையில் 96 ஆண் கைதிகள், 40 பெண் கைதிகள் கல்வி பயின்றனர். ஆறுமாத கால பயிற்சி முடிவடைந்த நிலையில் நேற்று அடிப்படை எழுத்தறிவு தேர்வு நடந்தது. டி.ஐ.ஜி., முருகேசன், கண்காணிப்பாளர் சதீஷ்குமார், தொடக்க கல்வி அலுவலர் கணேசன், ஒருங்கிணைப்பாளர் ஜெரால்டு கண்காணித்தனர்.