ADDED : நவ 26, 2025 05:09 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மேலுார்: மதுரை மீனாட்சி அம்மன் கோயிலின் உபகோயிலான திருவாதவூர் பிடாரி அம்மன் கோயில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு நேற்று யாக சாலை பூஜை துவங்கியது.
நவ.27 நான்காம் கால யாகசாலை பூஜை முடிவில் கும்பாபிஷேகமும் அதைதொடர்ந்து சிறப்பு அபிஷேகம், ஆராதனை நடைபெறும். ஏற்பாடுகளை அறங்காவலர் குழுத்தலைவர் ருக்மணி, இணை கமிஷனர் சுரேஷ், உதவி கமிஷனர் லோகநாதன், பேஷ்கார் ஜெயபிரகாஷ் செய்துள்ளனர்.

