ADDED : மார் 04, 2026 06:17 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மேலுார்: சூரக்குண்டு மந்தைச்சாமி, சின்னடக்கி, பெரியடக்கி அம்மன், ஆண்டி அரசு மகன் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு நேற்று யாகசாலை பூஜை துவங்கியது.
மார்ச் 5 நான்காம் கால யாகசாலை பூஜை முடிவில் மந்தை கோயில் மற்றும் பிற சுவாமிகளுக்கு கும்பாபிஷேகம் நடைபெறும். பிறகு சிறப்பு அபிஷேகம் மற்றும் தீபாராதனை நடைபெறும். அதனை தொடர்ந்து ஆன்மிக சொற்பொழிவு நிகழ்ச்சியும், பக்தர்களுக்கு அன்னதானம் நடைபெறும்.

