/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
கல்வி உதவித்தொகைக்கு விண்ணப்பிக்கலாம்
/
கல்வி உதவித்தொகைக்கு விண்ணப்பிக்கலாம்
ADDED : பிப் 06, 2025 06:10 AM
மதுரை; அரசு, உதவிபெறும் கல்வி நிறுவனங்கள், தனியார் தொழிற்கல்லுாரிகளில் அரசு ஒதுக்கீட்டில் பயிலும் பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர், சீர்மரபினர் மாணவர்களுக்கு பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை சார்பில் கல்வி உதவித்தொகை (போஸ்ட் மெட்ரிக் ஸ்காலர்ஷிப்) அரசால் வழங்கப்படுகிறது.
அரசு, உதவிபெறும் கலை, அறிவியல் கல்லுாரியில் இளங்கலை பயிலும் மாணவர்களுக்கு எவ்வித வருமான வரம்பும் கிடையாது. முதுகலை, பாலிடெக்னிக், தொழிற்படிப்புகளில் அரசு ஒதுக்கீட்டில் பயிலும் மாணவர்களின் பெற்றோருக்கு ஆண்டு வருமானம் ரூ.2.5 லட்சத்திற்கு மிகாமல் இருக்க வேண்டும்.
இந்தக் கல்வியாண்டுக்கான விண்ணப்பங்கள், umis.tn.gov.in என்ற இணையதளம் மூலம் செயல்பாட்டுக்கு வந்துள்ளது. மாணவர்கள் உடனே விண்ணப்பிக்கலாம். விண்ணப்பத்தை சமர்ப்பிக்க பிப்.28 கடைசி நாள். ஏற்கனவே உதவித்தொகை பெற்றுவரும் மாணவர்கள், அதனை புதுப்பிக்க விண்ணப்பம் செய்ய வேண்டியதில்லை.
நடப்பு கல்வியாண்டில் புதிதாக கல்வி உதவித்தொகை பெற கல்லுாரியில் முதலாண்டு சேர்க்கை பெற்ற, சென்ற ஆண்டில் உதவித்தொகைக்கு விண்ணப்பிக்க தவறிய புதிய மாணவர்கள், தற்போது தாங்கள் பயிலும் கல்லுாரியில் கல்வி உதவித் தொகைக்கென உள்ள ஒருங்கிணைப்பு அலுவலரை (நோடல் ஆபீசர்) அணுகி மேற்கண்ட இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம். முதல் தலைமுறை பட்டதாரி எனில் அதற்கான சான்றை சமர்ப்பிக்க வேண்டும்.
இதுதொடர்பான சந்தேகங்களுக்கு கலெக்டர் அலுவலகத்தில் உள்ள பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அலுவலரை நேரில் சந்திக்கலாம் என கலெக்டர் சங்கீதா தெரிவித்துள்ளார்.