sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

மதுரை

/

அர்ப்பணிப்பு, அசாத்தியம், நம்பிக்கை இருந்தால் சிவில் சர்வீஸ் தேர்வுகளை எளிதில் வெல்லலாம்''

/

அர்ப்பணிப்பு, அசாத்தியம், நம்பிக்கை இருந்தால் சிவில் சர்வீஸ் தேர்வுகளை எளிதில் வெல்லலாம்''

அர்ப்பணிப்பு, அசாத்தியம், நம்பிக்கை இருந்தால் சிவில் சர்வீஸ் தேர்வுகளை எளிதில் வெல்லலாம்''

அர்ப்பணிப்பு, அசாத்தியம், நம்பிக்கை இருந்தால் சிவில் சர்வீஸ் தேர்வுகளை எளிதில் வெல்லலாம்''


UPDATED : டிச 16, 2024 08:20 AM

ADDED : டிச 16, 2024 01:55 AM

Google News

UPDATED : டிச 16, 2024 08:20 AM ADDED : டிச 16, 2024 01:55 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மதுரை:'அர்ப்பணிப்பு, அசாத்திய நம்பிக்கை இருந்தால் சிவில் சர்வீஸ் தேர்வுகளை எளிதில் வெல்லலாம்'' என மதுரையில் தினமலர் நாளிதழ், வாஜிராம் அன்ட் ரவி இன்ஸ்டிடியூட் பார் ஐ.ஏ.எஸ்., எக்ஸாமினேஷன் சார்பில் நடந்த 'நீங்களும் ஆகலாம் ஐ.ஏ.எஸ்.,' நிகழ்ச்சியில் ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் பேசினர்.

தினமலர் நடத்திய நீங்களும் ஐ.ஏ.எஸ்., ஆகலாம் நிகழ்ச்சி




மதுரை தல்லாகுளம் லட்சுமிசுந்தரம் ஹாலில் நடந்த இந்நிகழ்ச்சியை மதுரை மாநகராட்சி

கமிஷனர் தினேஷ்குமார், வாஜிராம் அன்ட் ரவி இன்ஸ்டிடியூட் பார் ஐ.ஏ.எஸ்., பயிற்சி மைய பயிற்றுநர் ஸ்ரீவத்சன், நிகழ்ச்சியில் பங்கேற்ற மாணவிகள் லக்ஷனாமமதி, யுக்தாமுகி, சாதனா குத்துவிளக்கு ஏற்றி துவக்கி வைத்தனர்.

உண்மை உழைப்புக்கு உண்டு நுாறு சதவீதம் வெற்றி


ஸ்ரீவத்சன் பேசியதாவது:

கல்லுாரியில் நுழையும் போதே சிவில் சர்வீஸ் தேர்வில் ஆர்வம் உள்ளவர்கள் அதற்கு தயாராவது சரியான நேரம். குறிப்பாக முதல்நிலை தேர்வு, மெயின் தேர்வு குறித்து சரியான புரிதல் இருத்தல் அவசியம். முதல்நிலை தேர்வில் ஜெனரல் ஸ்டடிஸ், சி சாட் என இரண்டு தேர்வு எழுத வேண்டும். முதல்நிலை தேர்வில் வினாக்கள் அப்ஜெக்டிவ் முறையில் இருக்கும்.குறிப்பாக வரலாறு, இந்திய அரசியல், அறிவியல் தொழில்நுட்பம் உள்ளிட்ட பகுதிகளை ஆழ்ந்து படித்திருத்தல் வேண்டும். 'சி சாட்' தேர்வில் கணிதம், ஆங்கிலம் பகுதி வினாக்கள் இடம் பெறும். தேர்வு பயம் சிறிதும் இருக்க கூடாது. முதல்நிலை தேர்வுக்கு அடிக்கடி தேர்வு எழுதிப்பார்த்து மதிப்பீடு செய்து கொள்ளும் பயிற்சி முக்கியம். மெயின் தேர்வு விடை எழுதும் வகையில் இருக்கும். இதில் விருப்ப பாடத்தை தேர்வு செய்வதில் கவனமாக இருக்க வேண்டும். இரண்டிலும் தேர்ச்சி பெற்றால் டில்லியில் நேர்காணல் நடத்தப்படும்.

இத்தேர்வு, 'திடீரென ஒரு பொறுப்பை உங்களுக்கு வழங்கினால் நீங்கள் அதை சரியாக கையாளும் திறன் உங்களிடம் உள்ளதா' என்பதை சோதிக்கும் வகையில் இருக்கும். இதற்கு 'கோச்சிங்' கை கொடுக்கும். படிப்பது 40 சதவீதம் என்றால் 60 சதவீதம் தன்னம்பிக்கையுடன் இத்தேர்வுக்கு தயாராக வேண்டும். உண்மையாக

Image 1357075

உழைத்தால் 100 சதவீதம் வெற்றி உறுதி. அர்ப்பணிப்பு, அசாத்திய நம்பிக்கை வேண்டும்


மாநகராட்சி கமிஷனர் ச.தினேஷ்குமார் 'ஐ.ஏ.எஸ்., ஆவது எப்படி' என்ற தலைப்பில் பேசியதாவது:

இதுபோன்ற நிகழ்ச்சியை ஆண்டுதோறும் நடத்தும் தினமலர் நாளிதழுக்கு நன்றியை தெரிவிக்க வேண்டும். இங்கு கூடிய கூட்டத்தை பார்க்கும்போது ஐ.ஏ.எஸ்., மீதான ஆர்வம் அதிகரித்துள்ளது தெரிகிறது. 2013ல் பேஸ்புக் வழியே கர்நாடகா ஐ.ஏ.எஸ்., கேடர் அதிகாரி மணிவண்ணனின் ஒரு பதிவாக 'மென்டார்ஷிப் இலவச பயிற்சி'யில் சேர அழைப்பு விடுத்திருந்தார். அதில் இணைந்த பின் தான் வெற்றி பெற வேண்டும் என்ற வேகம் எனக்கு பிறந்தது.

எனவே ஒவ்வொருவரும் வாய்ப்பு கிடைக்கும் போது அதை இறுக பற்றிக்கொள்ள வேண்டும். சிவில் சர்வீஸ் வெற்றி என்பது ஒரு தவ வாழ்க்கை. ஆன்லைனில் ஏராளமான தகவல்கள் கிடைக்கின்றன; பயிற்சிஅளிக்கப்படுகிறது. தனி நபராக அல்லாமல் குழுவாக இணைந்து இத்தேர்வுக்கு தயாரானால் எளிதில் வெற்றி பெறலாம்.

வெற்றி பெற்றால் தான் உங்களின் தோல்விக்கான கதையை சொல்ல முடியும். அந்த வகையில் 2008 முதல் முயற்சித்தேன். 2016 ல் ஐ.ஏ.எஸ்., வெற்றி கைகூடியது. இதற்காக அதிக சம்பளத்தில் இருந்த வேலையையும் விட்டு வந்தேன். தேசிய அளவில் 24, தமிழகத்தில் 2ம் இடம் பெற்றேன். இது 8 ஆண்டுகள் போராட்டத்திற்கு கிடைத்த வெற்றி.

ஐ.ஏ.எஸ்., வெற்றி பெற வேண்டும் என முடிவு செய்துவிட்டால் ஒரு போருக்கு செல்வது போல் எதையும் சந்திக்கும் எண்ணத்துடன், எதைப் பற்றியும் கவலைப்படாமல் வெற்றியே இலக்கு என பயணிக்கும் அசாத்திய மனதைரியத்தை வளர்த்துக்கொள்ள வேண்டும்.

அடுத்த 3 அல்லது 4 ஆண்டுகள் தீவிரமாக தயாராகுங்கள். தேர்வுக்கு தயாராகும்போது மன அழுத்தம் ஏதும் ஏற்படாமல் இருக்க மனதுக்கு பிடித்த செயல்களில் ஈடுபடலாம். நுாற்றில் 5 பேருக்கு மட்டுமே முதல் முயற்சியில் வெற்றி கிடைக்கிறது. பிறர் எல்லாம் தோல்விக்கு பின் தான் வெற்றி பெறுகின்றனர். தோல்வியை கண்டு பயந்துவிடக்கூடாது. தோல்வி தான் நாம் வெற்றி பெறுவதற்கான பக்குவத்தை கொடுக்கும்.

ஆளுமையை மேம்படுத்துங்கள்


வி.நந்தகுமார், கமிஷனர், வருமான வரித்துறை:

மதுரையின் சிறப்பு ஆண்டுக்கு ஒருமுறை அழகர் ஆற்றில் இறங்கும் வைபவம் போல், இளைஞர்களுக்காக தினமலர் ஆண்டுதோறும் நடத்தும் இந்நிகழ்வும் அமைந்துள்ளது. பிளஸ் 2 படிக்கும் மாணவர்களுக்கு என்ன படிக்கலாம் என்பதையும் தினமலர் வழிகாட்டுகிறது நமக்கெல்லாம் பெருமை. நாம் என்னவாக வேண்டும் என்ற இலக்கை ஆழ்மனதில் நிர்ணயிக்க வேண்டும்.

நான் ஐ.ஏ.எஸ்., ஆகவேண்டும் என்ற எண்ணம் இருத்தலுடன், அதற்கேற்ற செயல்பாடுகளும் இருத்தல் வேண்டும். எப்போதும் ஒற்றை சிந்தனை என்பது அவசியம். இன்றைய இளைஞர்கள் அன்றாடம் அறிவை வளர்க்க கூடிய விஷயங்களை கற்றுக்கொள்ள வேண்டும்.

ஐ.ஏ.எஸ்., தேர்வு என்ற கனவை திறக்க டிகிரி என்ற ஒரு சாவி போதும். பள்ளியில் படிக்கும் போதே ஐ,ஏ.எஸ்., பற்றிய புரிதல் வேண்டும். நாம் என்னவாக வேண்டும் என்று யோசிப்பது தான் வாழ்க்கையில் முக்கியமான விஷயம். நாம் நினைத்த இலக்கு நிறைவேறும் என்பதை இந்த தருணம் முதல் சபதம் ஏற்றுக்கொண்டு, நீங்கள் ஆசைப்படும் ஐ.ஏ.எஸ்., இடத்தை வெல்ல செயல்படுங்கள். அதற்கான ஆளுமையை வளர்த்துக்கொள்ள வேண்டும்.

ஆளுமைகள் வாய்ப்புகளை கொடுக்கும். முதன்மை, மெயின் தேர்வை முடித்த பின் நேர்காணலுக்கு செல்லும் போது நாம் யார் என்பதை புரிய வைக்க வேண்டும். வீரியம் இல்லாத விதைகள் சரியாக முளைக்காது. உங்கள் ஆளுமையை மேம்படுத்துங்கள். வெற்றி பெற வேண்டும் என்ற எண்ணங்களுக்கு செயல் வடிவம் கொடுங்கள்.

சிவில் சர்வீஸ் உள்ளிட்ட எந்த தேர்வுகளிலும் சாதிக்கலாம். சிவில் சர்வீஸ் தேர்வை வெல்ல நாளிதழ்களை ஆழ்ந்து படியுங்கள்


வி.பி., ஜெயசீலன், கலெக்டர், விருதுநகர்:

சிவில் சர்வீஸ் உட்பட போட்டித் தேர்வுகளுக்கு தயாராகும் இளைஞர்கள் வாழ்க்கையில் ஏதாவது சாதிக்க வேண்டும், உயர்ந்த அரசு பணிக்கு செல்ல வேண்டும் என்ற லட்சியத்தை ஏற்படுத்திக்கொள்ள வேண்டும்.

ஒவ்வொரு ஆண்டும் சிவில் சர்வீஸ், எஸ்.எஸ்.ஏ., ஆர்.ஆர்.பி., டி.என்.பி.எஸ்.சி., உள்ளிட்ட அமைப்புகள் சார்பில் இரண்டரை முதல் மூன்றரை லட்சம் பணியிடங்களுக்கு தேர்வுகள் நடத்தப்படுகின்றன.

இதில் யு.பி.எஸ்.சி., மட்டும் ஆண்டுக்கு ஆயிரம் பணியிடங்களுக்கு தேர்வு நடத்துகிறது. இதில் 10 முதல் 12 லட்சம் பேர் விண்ணப்பிக்கின்றனர். இதற்கு கல்வித் தகுதி ஏதாவது ஒரு டிகிரி மட்டுமே. இதில் வெற்றி பெற அர்ப்பணிப்புடன் கூடிய கடின உழைப்பு அவசியம்.

இத்தேர்வுக்கு தயாராவதன் மூலம் பொதுஅறிவு, ஆங்கிலம், கியூ.ஏ., கணிதம் போன்ற பாடங்கள் எந்த தேர்வுக்கும் 60 சதவீதம் வரை தயாராகி விடலாம்.

முதலில் சரியான திட்டமிடலுடன், பாடத்திட்டங்கள் குறித்து சரியான புரிதல் இருத்தல் வேண்டும். தகுதியான கோச்சிங் சென்டர்களுக்கு செல்லலாம். அரசு சார்பிலும் சிவில் சர்வீஸ் தேர்வுக்கான கோச்சிங் வழங்கப்படுகிறது. முதல்நிலை தேர்வில் கேட்கப்படும் ஜெனரல் ஸ்டடீஸ், சி சாட் பகுதிகள் உட்பட இணையதளத்திலும் பயிற்சிகள் அளிக்கப்படுகின்றன.

வாய்ப்புகள் கொட்டிக்கிடக்கின்றன. அதை பயன்படுத்தும் முறையில் புரிதல், சரியான திட்டமிடுதல் வேண்டும். 'குறைவாக வைத்து அதிகமாக படித்து தீவிரமாக புரிதல் முறை' முதன்மை தேர்வுக்கு அவசியம். தொடர் உழைப்பு, சரியான திட்டமிடல், கற்றல் மீதான ஆர்வம் இவை இருந்தால் ஐ.ஏ.எஸ்., வெற்றி சாத்தியமே.

சிவில் சர்வீஸ் தேர்வுக்கான தயாரிப்பு பணிகளின் போது டி.என்.பி.எஸ்.சி., குரூப் 1 மற்றும் குரூப் 2 போன்ற தேர்வுகளுக்கும் பயன்படும். இதன் மூலம் ஒரே நேரத்தில் பல தேர்வுக்கும் தயாராகலாம். பிரதான தேர்வை எதிர்கொள்ள நாளிதழ்கள் படிப்பது மிக அவசியம். அன்றாட நிகழ்வுகள், அரசியல், சர்வதேச சுற்றுச்சூழல், உலக வர்த்தகம், ஜியோ பாலிட்டிக்ஸ் போன்றவற்றில் நல்ல புலமை அவசியம். போட்டித் தேர்வுக்கு படிக்கும் போது எக்காரணம் கொண்டும் பின்வாங்கி விடக்கூடாது.

இது, முடியாது என பாதியில் விட்டுச் சென்றவர்கள் அதிகம். எவர் ஒருவர் பொறுமையாக தன் உழைப்பை செலுத்துகிறோரோ அவருக்கு எதிலும் வெற்றி சாத்தியேமே. வெற்றி பெற வேண்டும் என்ற குறிக்கோளுடன் அதற்காக முயற்சிக்க வேண்டும். எந்த வெற்றியும் எளிதாக கிடைப்பதில்லை. கடின உழைப்புடன் திறமையை வளர்த்துக்கொள்ள வேண்டும். இவ்வாறு பேசினர். பங்கேற்றவர்கள் சிவில் சர்வீஸ் தேர்வுகள் தொடர்பாக பல்வேறு கேள்வி எழுப்பினர். அவர்களுக்கு கலெக்டர் ஜெயசீலன் பதில் அளித்தார்.

ஐ.ஏ.எஸ்., கனவை நனவாக்க ஊக்கமளித்தது தினமலர் நிகழ்ச்சியில் பங்கேற்ற கல்லூரி மாணவியர் கூறியது


தினமலர் செய்தி படித்து பங்கேற்றேன்


கல்லுாரியில் யு.ஜி., மூன்றாம் ஆண்டு படிக்கிறேன். சிவில் சர்வீஸ் தேர்வுக்காக தயாராகி வருகிறேன். பல சந்தேகங்கள் இருந்தன. தினமலர் நாளிதழில் இந்நிகழ்ச்சி நடக்கிறது என்பதை படித்து பங்கேற்றேன். ஐ.ஏ.எஸ்., வெற்றி குறித்து நம்பிக்கை ஏற்பட்டுள்ளது. இதற்காக கடுமையாக உழைக்க முடிவு எடுத்துள்ளேன். நன்றி தினமலர்.

-

ஐஸ்வர்யா மாணவி, மதுரை

நேர மேலாண்மை குழப்பம் தீர்ந்தது


பி.எஸ்சி., இறுதியாண்டு படிக்கிறேன். முதலாமாண்டு முதல் சிவில் சர்வீஸ் தேர்வுக்காக தயாராகி வருகிறேன். தினமலர் நிகழ்ச்சி மூலம் எவ்வாறு தயாராவது, நேர மேலாண்மை போன்றவை குறித்து சரியான புரிதல் ஏற்பட்டது. படிப்புடன் சுயமதிப்பீடு செய்துகொள்வது போன்ற ஆலோசனைகள் பயனுள்ளதாக இருந்தது.

ஸ்ரீ முருகேஸ்வரி மாணவி, போடி

ஆலோசனை அருமை


எம்.ஏ., படிக்கிறேன். சிறுவயது முதல் தினமலர் நாளிதழ் படிக்கிறேன். கடந்தாண்டு தினமலர் நடத்திய நிகழ்ச்சியிலும் பங்கேற்றேன். இந்தாண்டு நிகழ்ச்சியிலும் பல பயனுள்ள தகவல்கள் கிடைத்தன. விருதுநகர் கலெக்டர் ஜெயசீலன் தேர்வு குறித்தும், எவ்வாறு தயாராக வேண்டும் என்பதையும் எளிமையாக குறிப்பிட்டார்.

நாகலட்சுமி, மாணவி, மதுரை

அதிக நம்பிக்கை தந்தது


இந்நிகழ்ச்சி போட்டித் தேர்வுகளை எதிர்நோக்கியுள்ளோருக்கு அதிக தன்னம்பிக்கையை தந்தது. குறிப்பாக தென் மாநிலங்களை சேர்ந்தவர்கள் 'நடப்பு நிகழ்வுகளில்' அறியும் திறன் குறைவாக உள்ளதால் அதிகம் வெற்றியடைவதில்லை என்ற கருத்தை அறிய முடிந்தது. எண்ணங்களை செயலாக்க வேண்டும் என்ற ஆலோசனை அருமை.

கோமதி, மாணவி, மதுரை

வாய்ப்பை இறுக பற்ற வேண்டும்


வாய்ப்பை 'மிஸ் பண்ணக்கூடாது என்று மாநகராட்சி

கமிஷனர் தினேஷ்குமார் கூறியது தன்னம்பிக்கையாக இருந்தது. வாய்ப்பை இறுக பற்றிக்கொள்ள வேண்டும். தொடர் முயற்சி, மெயின் தேர்வில் விருப்ப பாடத்தை எவ்வாறு தேர்வு செய்வது போன்ற ஆலோசனை பயனுள்ளவை.

நன்றி தினமலர்.

வர்ஷா, மாணவி, மதுரை






      Dinamalar
      Follow us