/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க இளைஞர்கள் ஆர்வம்
/
வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க இளைஞர்கள் ஆர்வம்
வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க இளைஞர்கள் ஆர்வம்
வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க இளைஞர்கள் ஆர்வம்
ADDED : நவ 18, 2024 05:42 AM
பேரையூர் : வாக்காளர் பெயர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்குதல், முகவரி மாற்றம், திருத்தம் செய்வதற்கான சிறப்பு முகாம் பேரையூர் தாலுகாவில் உள்ள 205 வாக்குச்சாவடி மையங்களில் நேற்று நடந்தது.
பெயர் சேர்க்க 18 வயது துவங்கிய இளம் வாக்காளர்கள் ஆர்வமாக விண்ணப்ப படிவம் 6 ஐ வழங்கினர். நேற்று முன்தினம் இப்பகுதியில் மழை பெய்ததால் வாக்காளர்கள் வாக்குச்சாவடி மையத்திற்கு அதிகம் வரவில்லை. நேற்று இளம் வாக்காளர்கள் பெயர்களை சேர்ப்பதற்காக விண்ணப்பங்களை வழங்கினர். திருத்தம் செய்வதற்காகவும் ஏராளமானோர் விண்ணப்பங்களை வழங்கினர்.
தி.மு.க அ.தி.மு.க உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் பலரும் இளைஞர்கள், பொதுமக்களுடன் வந்து விண்ணப்பங்களை ஓட்டுச்சாவடி நிலை அலுவலர்களிடம் வழங்கினர். ஏற்பாடுகளை தாசில்தார் செல்லப்பாண்டி, தேர்தல் பிரிவு தாசில்தார் வீரமுருகன் செய்திருந்தனர்.