ADDED : ஜன 14, 2025 05:30 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சோழவந்தான்: திருவேடகம் விவேகானந்த கல்லுாரியில் விவேகானந்தரின் 162வது பிறந்தநாள் தேசிய இளைஞர் எழுச்சி தினமாக கொண்டாடப்பட்டது.
செயலர் வேதானந்த முன்னிலை வகித்தார். விவேகானந்தர் படிப்பக ஒருங்கிணைப்பாளர் முருகன் வரவேற்றார். முதல்வர் வெங்கடேசன் தலைமை வகித்து 'அச்சம் தவிர்' என்ற வாக்கிற்கு எடுத்துக்காட்டாக திகழ்ந்தவர் சுவாமி விவேகானந்தர் என பேசினார். கல்லுாரி குலபதி அத்யாத்மனந்த, 'விவேகானந்தரின் பன்முகத் தன்மைகள்' குறித்தும், பட்டிமன்ற பேச்சாளர் அருள் பிரகாஷ் 'எல்லாம் உனக்குள்ளே' என்ற தலைப்பிலும் பேசினர். உதவிப் பேராசிரியர் பாலமுருகன், துணை முதல்வர் கார்த்திகேயன், தேர்வு கட்டுப்பாட்டு அலுவலர் ஜெய்சங்கர், துறைத் தலைவர்கள், பேராசிரியர்கள் பங்கேற்றனர். ஒருங்கிணைப்பாளர் சதீஷ்பாபு நன்றி கூறினார்.