ADDED : நவ 01, 2025 03:05 AM
மதுரை: பள்ளிக்கல்வித்துறை சார்பில் பாரதியார் தின, குடியரசு தின விழா மதுரை மண்டல பள்ளிகளுக்கு இடையிலான ஆடவர், மகளிர் பாட்மின்டன் போட்டிகள் மதுரை ரேஸ்கோர்ஸ் மைதானத்தில் நடந்தது.
ஆடவர் பிரிவு போட்டிமுடிவுகள் 14 வயது ஆடவர் ஒற்றையர் பிரிவில் இளங்கோ மாநகராட்சி பள்ளி முதலிடம், தியாகராஜர் மாடல் பள்ளி 2ம் இடம், கேட்டி வில்காக்ஸ் பள்ளி 3ம் இடம், அக் ஷரா பள்ளி 4ம் இடம் பெற்றன. 17 வயது பிரிவில் லீ சாட்லியர் பள்ளி முதலிடம், அண்ணாமலையார் பள்ளி 2ம் இடம், கேரன் பள்ளி 3ம் இடம், செயின்ட் பிரிட்டோ பள்ளி 4ம் இடம் பெற்றன. 19 வயது பிரிவில் ரோட்டரி லஹரி பள்ளி முதலிடம், ஜாஸ் பள்ளி 2ம் இடம், தியாகராஜர் மாடல் பள்ளி 3ம் இடம், சமபாரதம் பள்ளி 4ம் இடம் பெற்றன.
14 வயது ஆடவர் இரட்டையர் பிரிவில் தியாகராஜர் பள்ளி முதலிடம், அண்ணாமலையார் பள்ளி 2ம் இடம், எஸ்.டி.ஏ. பள்ளி 3ம் இடம், சி.இ.ஓ.ஏ. பள்ளி 4ம் இடம் பெற்றன. 17 வயது பிரிவில் லீ சாட்லியர் பள்ளி முதலிடம், கேரன் பள்ளி 2ம் இடம், ஸ்ரீ அரபிந்தோமீரா பள்ளி 3ம் இடம், பாலமேடு பத்ரகாளியம்மன் பள்ளி 4ம் இடம் பெற்றன. 19 வயது பிரிவில் தியாகராஜர் மாடல் பள்ளி முதலிடம், டி.வி.எஸ். பள்ளி 2ம் இடம், கேரன் பள்ளி 3ம் இடம், மங்கையர்க்கரசி பள்ளி 4ம் இடம் பெற்றன.
மகளிர் பிரிவு 14 வயது மகளிர் ஒற்றையர் பிரிவில் செயின்ட் ஜோசப் பள்ளி முதலிடம், அவ்வை மாநகராட்சி பள்ளி 2ம் இடம், சி.இ.ஓ.ஏ., பள்ளி 3ம் இடம், லிங்கா பள்ளி 4ம் இடம் பெற்றன. 17 வயது பிரிவில் சி.இ.ஓ.இ., பள்ளி முதலிடம், மகாத்மா பள்ளி 2ம் இடம், டி.வி.எஸ். பள்ளி 3ம் இடம், பாலமேடு பத்ரகாளியம்மன் பள்ளி 4ம் இடம் பெற்றன.
19 வயது பிரிவில் சி.இ.ஓ.ஏ., பள்ளி முதலிடம், செயின்ட் ஜான் பள்ளி 2ம் இடம், டி.வி.எஸ். பள்ளி மூன்றாமிடம், தாய் பள்ளி 4ம் இடம் பெற்றன.
14 வயது மகளிர் இரட்டையர் பிரிவில் செயின்ட் ஜோசப் பள்ளி முதலிடம், டி.வி.எஸ். பள்ளி 2ம் இடம், எம்.எஸ்.ஆர். பள்ளி 3ம் இடம், அவ்வை மாநகராட்சி பள்ளி 4ம் இடம் பெற்றன. 17 வயது பிரிவில் சி.இ.ஓ.ஏ. பள்ளி முதலிடம், சீத்தாலட்சுமி பள்ளி 2ம் இடம், மகாத்மா பாபா பள்ளி 3ம் இடம், மகாத்மா பள்ளி 4ம் இடம் பெற்றன.
19 வயது பிரிவில் சி.இ.ஓ.ஏ., பள்ளி முதலிடம், செயின்ட் மைக்கேல் பள்ளி 2ம் இடம், செயின்ட் ஜான் பள்ளி 3ம் இடம், மகாத்மா பள்ளி 4ம் இடம் பெற்றன.

