/
உள்ளூர் செய்திகள்
/
மயிலாடுதுறை
/
சீர்காழியில் இருவருக்கு அரிவாள் வெட்டு- மர்ம நபர்களுக்கு போலீஸ் வலைவீச்சு.
/
சீர்காழியில் இருவருக்கு அரிவாள் வெட்டு- மர்ம நபர்களுக்கு போலீஸ் வலைவீச்சு.
சீர்காழியில் இருவருக்கு அரிவாள் வெட்டு- மர்ம நபர்களுக்கு போலீஸ் வலைவீச்சு.
சீர்காழியில் இருவருக்கு அரிவாள் வெட்டு- மர்ம நபர்களுக்கு போலீஸ் வலைவீச்சு.
ADDED : ஜூன் 27, 2024 08:20 PM

சீர்காழி:சீர்காழியில் இருவரை அரிவாளால் வெட்டி விட்டு தப்பி ஓடிய மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அய்யனார் கோவில் தெருவை சேர்ந்தவர் பூராசாமி மகன் மதன்குமார்.34. இவர் சீர்காழி சட்டை நாதர் கோவில் தெற்கு வீதியில் இரவு நேரங்களில் டிபன் மற்றும் பஜ்ஜி கடை நடத்தி வருகிறார். இதேபோல் இதே பகுதியை சேர்ந்த இவரது உறவினர் கணேசன் மகன் மணிகண்டன்.32. இவர் மறைன் இன்ஜினியர் படித்துவிட்டு கேரளாவில் உள்ள ஒரு நிறுவனத்தில் வேலை பார்த்து வருவதாக கூறப்படுகிறது.
தற்போது இவர் சொந்த ஊரில் இருந்து வருகிறார். இந்நிலையில் பிரதான கச்சேரி ரோடு முக்கூட்டில் உள்ள ஒரு டீக்கடை அருகில் மதன்குமார் நின்று கொண்டிருந்ததாக கூறப்படுகிறது. அப்போது முகத்தில் முக கவசம் அணிந்தபடி 3 டூவீலர்களில் வந்த மர்ம நபர்கள் மதன்குமார் அருகில் வந்து தங்கள் கையில் வைத்திருந்த கத்தி உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களால் மதன்குமாரின் ஆடையை கிழித்து அவர்கள் கொண்டு வந்த ஆயுதங்களை சாலையில் தேய்த்து அங்கிருந்து பொதுமக்களை விரட்டியடித்து மதன்குமாரை கை, கால் உள்ளிட்ட இடங்களில் சரமாரி வெட்டி விட்டு கண்ணிமைக்கும் நேரத்தில் சென்று விட்டனர்.
இதைக் கண்டு அக்கம் பக்கத்தினர் அலறியடித்து ஓட்டம் பிடித்தனர். இதில் நிலைகுலைந்த மதன்குமார் இரத்தம் சொட்ட சொட்ட மயங்கி விழுந்தார். இதை போல் அடையாளம் தெரியாத மர்ம நபர்கள் உப்பனாற்றில் மீன் பிடித்துக் கொண்டிருந்த மதன்குமார் உறவினர் மணிகண்டன் என்பவரையும் முகம், தலை உள்ளிட்ட பகுதிகளில் அறிவாளால் வெட்டிவிட்டு மணிகண்டன் ஓட்டி வந்த என்ஃபீல்டு புல்லட்டை சேதப்படுத்தி உப்பனாற்றில் வீசிவிட்டு தலைமறைவாகி விட்டனர்.
இதுகுறித்து தகவல் அறிந்த சீர்காழி போலீசார் சம்பவ இடங்களுக்கும் சென்று இருவரையும் 108 ஆம்புலன்ஸ் மூலம் சிகிச்சைக்காக சீர்காழி அரசு மருத்துவமனைக்கு கொண்டு வந்து சேர்த்தனர். அங்கு இருவருக்கும் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது இதில் மதன் குமாருக்கு வெட்டுக்காயங்கள் அதிகமாக இருந்ததால் மேல் சிகிச்சைக்காக பாண்டிச்சேரி ஜிப்மர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து மணிகண்டனுக்கு சீர்காழி அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இச்சம்பவம் குறித்து கேள்விப்பட்ட உறவினர்கள் ஏராளமானோர் சீர்காழி அரசு மருத்துவமனை யில் குவிந்ததால் அரசு மருத்துவமனை வளாகத்தில் பதட்டம் நிலவியது. தொடர்ந்து போலீசார் மருத்துவமனை வளாகத்தில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இச்சம்பவம் முன் விரோதத்தால் நடைபெற்றதா என்பது உள்ளிட்ட பல்வேறு கோணங்களில் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றன.
போலீஸ் நிலையம், தாலுக்கா அலுவலகம், பஸ் நிலையம் அருகில் உள்ள மக்கள் நடமாட்டம் மிகுதியாக உள்ள பிரதான சாலையில் இச்சம்பவம் நடந்ததால் பொதுமக்கள் அச்சம் அடைந்து வருகின்றனர். இச்சம்பவம் சீர்காழியில் பெரும் பதட்டத்தையும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.