விசாரணைக்கு ஆஜராகாததால் இன்ஸ்பெக்டருக்கு பிடிவாரண்ட்
விசாரணைக்கு ஆஜராகாததால் இன்ஸ்பெக்டருக்கு பிடிவாரண்ட்
UPDATED : அக் 08, 2026 08:03 PM
ADDED : அக் 08, 2026 07:59 PM
மயிலாடுதுறை: வழக்கு விசாரணைக்கு தொடர்ந்து ஆஜராகாததால், போலீஸ் இன்ஸ்பெக்டருக்கு பிடிவாரண்ட் பிறப்பித்து மயிலாடுதுறை கோர்ட் உத்தரவிட்டது.
மயிலாடுதுறை மாவட்டம், பாலையூர் போலீஸ் ஸ்டேஷனில் கடந்த 2021ம் ஆண்டு இன்ஸ்பெக்டராக பணியாற்றியவர் ஜெயா. இவர், பாலையூர் போலீஸ் ஸ்டேஷன் எல்லைக்குட்பட்ட பகுதியில் 2021ம் ஆண்டு நடந்த விபத்து வழக்கில் விசாரணை அதிகாரி ஆவார். இவர் தற்போது பட்டுக்கோட்டை போலீஸ் ஸ்டேஷனில் இன்ஸ்பெக்டராக உள்ளார். வழக்கு தொடர்பாக விசாரணைக்கு மயிலாடுதுறை கோர்ட்டில் ஆஜராக பலமுறை சம்மன் அனுப்பியும் ஆஜராகவில்லை. இந்நிலையில் அந்த வழக்கு மயிலாடுதுறை குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது இன்ஸ்பெக்டர் ஜெயா கோர்ட்டில் ஆஜராகாததால் அவருக்கு பிடிவாரண்டு பிறப்பித்து குற்றவியல் நீதித்துறை நடுவர் ராஜேஷ்கண்ணா உத்தரவிட்டார்.
