தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/மயிலாடுதுறை/மயிலாடுதுறை காங்., எம்.எல்.ஏ., வை கண்டித்து டாக்டர்கள் போராட்டம்

மயிலாடுதுறை காங்., எம்.எல்.ஏ., வை கண்டித்து டாக்டர்கள் போராட்டம்

மயிலாடுதுறை காங்., எம்.எல்.ஏ., வை கண்டித்து டாக்டர்கள் போராட்டம்


UPDATED : அக் 10, 2026 07:29 PM

ADDED : அக் 10, 2026 07:26 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : அக் 10, 2026 07:29 PM ADDED : அக் 10, 2026 07:26 PM


Follow on Google
அ நிறம் | அளவு

மயிலாடுதுறை: மயிலாடுதுறை காங்., எம்.எல்.ஏ., வை கண்டித்து, அரசு டாக்டர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மயிலாடுதுறை அரசு மருத்துவமனையில் கடந்த 7ம் தேதி தொகுதி காங்., எம்.எல்.ஏ., ஜமால் முகமது யூனுார் திடீர் ஆய்வு மேற்கொண்டார். அங்கு, டாக்டர்கள் மற்றும் செவிலியர்களுடன் ஆலோசனை நடத்திய அவர், மருத்துவமனைக்கு வரும் நோயாளிகளுக்கு மரியாதை கொடுப்பதில்லை, வேலை செய்ய முடிந்தால் இருங்கள் இல்லை என்றால் நீங்களே டிரான்ஸ்பர் பெற்று சென்று விடுங்கள். இல்லையெனில் நடவடிக்கை எடுக்கப்படும் என கடுமையாக பேசியுள்ளார். மேலும், அவர் பேசியதை ரீல்ஸ் வீடியோவாக தனது பேஸ்புக் பக்கத்தில் எம்.எல்.ஏ., நேற்று முன்தினம் பதிவிட்டுள்ளார்.

மயிலாடுதுறை அரசு மருத்துவமனையில் போதிய டாக்டர்கள், செவிலியர்கள் இல்லாத நிலையில் பனிச் சுமையோடு நாங்கள் பணிபுரிந்து வருகிறோம், இந்நிலையில், எம்.எல்.ஏ., தங்களை பற்றி பேசியது மன உளைச்சலை ஏற்படுத்தி உள்ளதாக டாக்டர்கள் தெரிவித்தனர்.

எம்.எல்.ஏ.,வின் செயலை கண்டித்து தமிழ்நாடு அரசு மருத்துவர்கள் சங்கம் சார்பில் கலெக்டரிடம் புகார் மனு அளிக்கப்பட்டது. மேலும், தங்களின் எதிர்ப்பை தெரிவிக்கும் வகையில் அரசு மருத்துவர்கள் நேற்று கருப்பு பேட் அணிந்து பணியில் ஈடுபட்டனர். இதையறிந்த கலெக்டர் ஸ்ரீகாந்த், அரசு மருத்துவமனைக்கு வந்து டாக்டர்கள் மற்றும் செவிலியர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்.

இந்நிலையில், கலெக்டர் புறப்பட்டு சென்றதும் தமிழ்நாடு அரசு மருத்துவர்கள் சங்க மாவட்ட தலைவர் டாக்டர் அறிவழகன் தலைமையில் அரசு மருத்துவமனை வளாகத்தில் டாக்டர்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது எம்.எல்.ஏ., வின் செயல்பாட்டை கண்டித்தும், உடனடியாக பேஸ்புக் பகத்தில் வெளியிட்ட வீடியோவை அகற்ற வேண்டும், எம்.எல்.ஏ., வருத்தம் தெரிவிக்க வேண்டும் என வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர். பணி இடைவேளையில் போராட்டம் நடந்ததால் நோயாளிகளுக்கு பாதிப்பு ஏற்படவில்லை.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us