/
உள்ளூர் செய்திகள்
/
மயிலாடுதுறை
/
ஆசிரியையிடம் செயின் பறித்த இருவர் கைது
/
ஆசிரியையிடம் செயின் பறித்த இருவர் கைது
ADDED : நவ 19, 2024 07:41 AM
மயிலாடுதுறை: கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்குடியை சேர்ந்தவர் ஆலிஸ்மேரி,52. மயிலாடுதுறை மாவட்டம் கடலங்குடி அரசு தொடக்கப் பள்ளியில் தலைமை ஆசிரியையாக பணியாற்றி வருகிறார்.
இவர் தினமும் ஊரில் இருந்து டூவீலரில் பள்ளிக்கு வந்து செல்வது வழக்கம். கடந்த 11ம் தேதி தனது தங்கை மகனுடன் டூவீலரில் பள்ளிக்கு வந்த ஆலிஸ்மேரியை புரசங்காடு கொள்ளிடம் ஆற்றின் கரையில் வழிமறித்த ஒரு கும்பல், மிளகாய் பொடியை தூவி அவர் அணிந்திருந்த ஏழு சவரன் தங்கச் செயினை பறித்துச் சென்றது.
புகாரின் பேரில் மணல்மேடு போலீசார் வழக்கு பதிந்து, சப் இன்ஸ்பெக்டர் இளையராஜா தலைமையிலான தனிப்படை போலீசார் விசாரணை நடத்தினர்.
செயின் பறிப்பு சம்பவம் நடந்த இடத்தில் இருந்த செல்போன் சிக்னல்களை ஆய்வு செய்து, சந்தேகத்தின்பேரில் சி.புலியூரை சேர்ந்த பழனி மகன் விவேகானந்தன்,28, புரசங்காடு கலியமூர்த்தி மகன் பிருத்திவிராஜ்,22, ஆகிய இருவரை பிடித்து விசாரித்தனர்.
அதில் திருட்டு வழக்குகளில் தொடர்புடைய விவேகானந்தன் கடந்த சில நாட்களாக ஆலிஸ்மேரியை கண்காணித்து, தனது கூட்டாளிகளுடன் சேர்ந்து இந்த வழிப்பறியில் ஈடுபட்டது தெரியவந்தது. இருவரையும் போலீசார் கைது செய்து ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர். நகையுடன் தலைமறைவாக உள்ள கூட்டாளிகளை தேடி வருகின்றனர்.

