/
உள்ளூர் செய்திகள்
/
மயிலாடுதுறை
/
வீடு புகுந்து நகை திருடிய சிறுமி உட்பட இருவர் கைது
/
வீடு புகுந்து நகை திருடிய சிறுமி உட்பட இருவர் கைது
வீடு புகுந்து நகை திருடிய சிறுமி உட்பட இருவர் கைது
வீடு புகுந்து நகை திருடிய சிறுமி உட்பட இருவர் கைது
ADDED : மே 01, 2025 01:00 AM
மயிலாடுதுறை:மயிலாடுதுறை அருகே பூட்டிய வீட்டின் கதவை திறந்து நகைகளை திருடிய சிறுமி உட்பட இருவரை போலீசார் கைது செய்தனர்.
மயிலாடுதுறை அருகே கூறைநாடு பகுதியை சேர்ந்தவர் ரமேஷ், 48. நகை கடை சூப்பர்வைசர். கடந்த 26ம் தேதி வீட்டை பூட்டிக்கொண்டு, குடும்பத்துடன் சினிமா பார்க்க தியேட்டருக்கு சென்றுள்ளார். இரவு திரும்பி வந்து பார்த்தபோது, வீட்டில் கதவு திறந்து கிடந்தது.
இதனால் அதிர்ச்சி அடைந்தவர், உள்ளே சென்று பார்த்தபோது, பீரோலில் இருந்த 16 சவரன் நகைகளை மர்ம நபர்கள் திருடி சென்றது தெரியவந்தது.
இதுகுறித்த புகாரின் பேரில் மயிலாடுதுறை போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தினர். அப்போது, ரமேஷ் வீட்டின் அருகே வசிக்கும் 17 வயது சிறுமியை பிடித்து விசாரணை செய்ததில் சிறுமியும், அவரது நண்பரான ஆத்தூர் பகுதியைச் சேர்ந்த இளவரசன், 33; என்பவரும் சேர்ந்து, ரமேஷ் வீட்டின் கதவைத் திறந்து நகைகளை திருடியது தெரியவந்தது.
அதையடுத்து இருவரையும் போலீசார் கைது செய்து, நகைகளை பறிமுதல் செய்தனர்.