/
உள்ளூர் செய்திகள்
/
மயிலாடுதுறை
/
தனியார் பஸ் மோதி இரு வாலிபர்கள் பலி
/
தனியார் பஸ் மோதி இரு வாலிபர்கள் பலி
ADDED : நவ 03, 2024 05:26 PM

மயிலாடுதுறை:சீர்காழி அருகே தனியார் பஸ் மோதிய விபத்தில் இரு வாலிபர்கள் பலியானது குறித்து புதுப்பட்டிணம் போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி சிங்காரத்தோப்பு தெருவை சேர்ந்த மணிவேல் மகன் மகேஷ்குமார்.20, ஜோதி மகன் சதீஷ்குமார்.20, பழனிச்சாமி மகன் சந்தோஷ்குமார்.19. ஆகிய மூவரும் இன்று மதியம் டிஎன் 82 டபுள்யு 5193 என்ற எண்ணுள்ள ஹோண்டா ஆக்டிவா டூவீலரில் திருமுல்லைவாசல் சாலையில் சீர்காழி நோக்கி வந்துள்ளனர். வழியில் விநாயககுடி பொறை வாய்க்கால் பாலத்தில் வந்த போது நிலைதடுமாறி கீழே சரிந்தது அப்போது எதிரே சீர்காழியில் இருந்து பழையார் நோக்கிச் சென்ற டிஎன் 63 ஏஆர் 6499 என்ற எண்ணுள்ள தனியார் (கனகராஜ்) பஸ் மோதியதில் டூவீலரின் பின்னால் அமர்ந்து வந்த சதீஷ்குமார், சந்தோஷ்குமார் ஆகிய இருவரும் தலை நசுங்கி சம்பவ இடத்திலேயே பலியானார்கள்.
டூவீலரை ஓட்டி வந்த மகேஷ்குமார் காயமடைந்தார். அவரை அருகில் இருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக ஆம்புலன்ஸ் மூலம் சீர்காழி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சேர்த்தனர். தகவல் அறிந்த புதுப்பட்டினம் போலீசார் வழக்குப்பதிந்து விபத்து குறித்து விசாரணை மேற்கொண்டுள்ளதுடன், தப்பி ஓடிய தனியார் பஸ் டிரைவர் ஓதவந்தான்குடி சரவணன் என்பவரை தேடி வருகின்றனர். இச்சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. விபத்தில் இறந்த சதீஷ்குமார் பாலிடெக்னிக் முடித்துள்ளதுவும் சந்தோஷ்குமார் பிளஸ் 2 படித்து வருவதும் குறிப்பிடத்தக்கது.