/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
மருத்துவ செலவுக்கு பணம் தராத மகன், மகள் மீது நடவடிக்கை கோரி மனு
/
மருத்துவ செலவுக்கு பணம் தராத மகன், மகள் மீது நடவடிக்கை கோரி மனு
மருத்துவ செலவுக்கு பணம் தராத மகன், மகள் மீது நடவடிக்கை கோரி மனு
மருத்துவ செலவுக்கு பணம் தராத மகன், மகள் மீது நடவடிக்கை கோரி மனு
ADDED : மார் 04, 2025 01:26 AM
மருத்துவ செலவுக்கு பணம் தராத மகன், மகள் மீது நடவடிக்கை கோரி மனு
நாமக்கல்:மருத்துவம் உள்ளிட்ட செலவுக்கு பணம் தராத தன் மகன், மகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், கருணை அடிப்படையில் தன்னை கொலை செய்ய வேண்டும் எனக்கோரி, நாமக்கல் கலெக்டர் உமாவிடம், பழனிசாமி, 79, என்ற முதியவர் மனு அளித்துள்ளார்.
அந்த மனுவில் கூறியிருப்பதாவது: மோகனுார், வளையப்பட்டி மாரியம்மன் கோவில் தெருவில் வசிக்கிறேன். என் மகன், மகள் ஆகியோருக்கு, என் வீட்டுமனை, விவசாய நிலம் ஆகியவற்றை எழுதி வைத்தேன். ஆனால் அவர்கள் எனக்கு உடை, மருத்துவம் உள்ளிட்ட எந்த செலவுக்கும் பணம் தருவதில்லை. இதுகுறித்து ஏற்கனவே மனு கொடுத்தும் நடவடிக்கை எடுக்கவில்லை. எனவே என் மகன், மகள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். அல்லது என்னை கருணை அடிப்படையில் கொலை செய்ய வேண்டும்.
இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.