/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
தேர்வில் மதிப்பெண் பெற குழந்தைகளுக்கு மனஅழுத்தம் ஏற்படுத்தக்கூடாது: கலெக்டர் அறிவுரை
/
தேர்வில் மதிப்பெண் பெற குழந்தைகளுக்கு மனஅழுத்தம் ஏற்படுத்தக்கூடாது: கலெக்டர் அறிவுரை
தேர்வில் மதிப்பெண் பெற குழந்தைகளுக்கு மனஅழுத்தம் ஏற்படுத்தக்கூடாது: கலெக்டர் அறிவுரை
தேர்வில் மதிப்பெண் பெற குழந்தைகளுக்கு மனஅழுத்தம் ஏற்படுத்தக்கூடாது: கலெக்டர் அறிவுரை
ADDED : ஜன 11, 2025 01:42 AM
மோகனுார், :''பெற்றோர், தங்கள் குழந்தைகள் தேர்வில் அதிக மதிப்பெண் பெற வேண்டும் என்ற நோக்கில் அவர்களுக்கு மன அழுத்தம் ஏற்படுத்தக் கூடாது,'' என, கலெக்டர் உமா பேசினார்.
மோகனுார் தாலுகா, தோளூர் கிராமத்தில், மக்கள் தொடர்பு திட்ட முகாம் நடந்தது.அட்மா குழுத்தலைவர் நவலடி, ஆர்.டி.ஓ., பார்த்தீபன், கூட்டுறவு சங்க இணைபதிவாளர் அருளரசு, தனித்துணை கலெக்டர் பிரபாகரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
நாமக்கல் கலெக்டர் உமா தலைமை வகித்து பேசியதாவது:'உங்களைத்தேடி உங்கள் ஊரில்' திட்டத்தின் கீழ், மோகனுார் தாலுகாவில் மேற்கொள்ளப்பட்ட கள ஆய்வின் அடிப்படையில், இக்கிராமத்தில் உள்ள பொதுமக்களுக்கு அரசின் திட்டங்களை கொண்டு சேர்க்க வேண்டும் என, மாவட்ட நிர்வாகம் சார்பில், 319 பயனாளிகளுக்கு, 66.40 லட்சம் ரூபாய் மதிப்பில் அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கப்படுகின்றன.
இன்றைய நவீன உலகில் பல்வேறு வாய்ப்புகள் நிறைந்துள்ளன.
பெற்றோர், தங்கள் குழந்தைகளை தேர்வுகளில் அதிக மதிப்பெண் பெற வேண்டும் என்ற நோக்கில் அவர்களுக்கு மன அழுத்தம்
ஏற்படுத்தக் கூடாது. ஒவ்வொரு குழந்தைக்கும் தனி திறமை உள்ளது. அதனை பெற்றோர் ஊக்குவிக்க வேண்டும்.
நாமக்கல் கால்நடை மருத்துவ கல்லுாரி மற்றும் ஆராய்ச்சி நிலைய மாணவி துளசிமதி, பாரிஸ் பாராலிம்பிக் மகளிர் பாட்மின்டனில் வெள்ளி பதக்கம் வென்று, நம் நாட்டிற்கு பெருமை சேர்த்துள்ளார்.
அவருக்கு தற்போது விளையாட்டு துறையில் உயரிய விருதான, 'அர்ஜூனா' விருது வழங்கப்பட்டுள்ளது. அரசு பள்ளி மற்றும் அரசு மருத்துவமனை என்பது நம் பெருமை என்பதை பொதுமக்கள் புரிந்துகொள்ள வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.

