தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/நாமக்கல்/ விவசாயிகளுக்கு அடையாள எண் வழங்ககிராமம் தோறும் சிறப்பு முகாம்: கலெக்டர்

விவசாயிகளுக்கு அடையாள எண் வழங்ககிராமம் தோறும் சிறப்பு முகாம்: கலெக்டர்

விவசாயிகளுக்கு அடையாள எண் வழங்ககிராமம் தோறும் சிறப்பு முகாம்: கலெக்டர்


ADDED : பிப் 13, 2025 01:34 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : பிப் 13, 2025 01:34 AM


Follow on Google
அ நிறம் | அளவு

விவசாயிகளுக்கு அடையாள எண் வழங்ககிராமம் தோறும் சிறப்பு முகாம்: கலெக்டர்

நாமக்கல்:'விவசாயிகளுக்கு அடையாள எண் வழங்க, கிராமம்தோறும் அவர்களின் விபரங்களை சேகரிக்க சிறப்பு முகாம் நடக்கிறது' என, நாமக்கல் கலெக்டர் உமா தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து, அவர் வெளியிட்ட அறிக்கை:நாமக்கல் மாவட்டத்தில், வேளாண் அடுக்ககம் திட்டத்தின் கீழ், அனைத்து கிராமங்களிலும் உள்ள பஞ்சாயத்து அலுவலகம், சமுதாய கூடங்களில் ஒருங்கிணைந்த விவசாயிகள் தரவு அடுக்கு உருவாக்கும் பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த திட்டத்தில், நில விபரங்களுடன், விவசாயிகளின் விபரம் மற்றும் நில உடமை வாரியான விபரங்கள் பதிவு செய்யப்பட்டு, ஒவ்வொரு விவசாயிகளுக்கும் தனிக்குறியீடு எண் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

விவசாயிகளின் ஒப்புதல் பெறப்பட்ட பிறகே, அவர்களின் தரவுகள் சேகரிக்கப்பட்டு அடையாள எண் வழங்கப்படும்.

இதன் மூலம், மத்திய, மாநில அரசுகளின் அனைத்து திட்ட பலன்களும் விவசாயிகளின் தரவுத்தளம் அடிப்படையிலேயே வழங்கப்படும். இதனால், அனைத்து துறை பயன்களையும், மானியங்களையும் ஒற்றைச்சாளர முறையில் பெறுவதுடன், ஆன்லைன் மூலம் இணையதளத்தில் பதிவு செய்தால் முன்னுரிமை அடிப்படையில் அரசின் பயன்களை பெற்றுக்கொள்ளலாம். ஆதார் எண் அடிப்படையில் விவசாயிகளின் வங்கிக் கணக்குக்கு நேரடி பணப்பரிமாற்றம் செய்யப்படும்.

நாமக்கல் மாவட்டத்தை சேர்ந்த அனைத்து விவசாயிகளும் முகாம் நடக்கும் நாட்களில், தங்களின் நில ஆவணங்கள், ஆதார் எண், மொபைல் போன் எண் கொடுத்து பதிவு செய்து பயன்பெறலாம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us