/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
ராசிபுரம் புதிய பஸ் ஸ்டாண்ட் மீட்புக்குழு அவசர ஆலோசனை
/
ராசிபுரம் புதிய பஸ் ஸ்டாண்ட் மீட்புக்குழு அவசர ஆலோசனை
ராசிபுரம் புதிய பஸ் ஸ்டாண்ட் மீட்புக்குழு அவசர ஆலோசனை
ராசிபுரம் புதிய பஸ் ஸ்டாண்ட் மீட்புக்குழு அவசர ஆலோசனை
ADDED : ஆக 25, 2024 01:22 AM
ராசிபுரம் புதிய பஸ் ஸ்டாண்ட்
மீட்புக்குழு அவசர ஆலோசனை
ராசிபுரம், ஆக. 25-
ராசிபுரம் புதிய பஸ் ஸ்டாண்டை இடமாற்ற, நகராட்சியில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதற்கு, பல்வேறு வணிக அமைப்புகள், பிரதான கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. பஸ் ஸ்டாண்ட் இடமாற்ற தீர்மானத்தை ரத்து செய்ய வேண்டும் என்பதை வலியுறுத்தி, கடையடைப்பு, மனு கொடுக்கும் போராட்டம், உண்ணாவிரதம், மனித சங்கிலி உள்ளிட்ட போராட்டங்களில் ஈடுபட்டனர். இந்நிலையில், பஸ் ஸ்டாண்ட் மீட்புக்குழுவின் அவசர ஆலோசனை கூட்டம், நேற்று நடந்தது.
இதில், செப்., 3, 4 ஆகிய தேதிகளில் அனைத்து அரசியில் கட்சி தலைவர்களையும் நேரில் சந்தித்து பஸ் ஸ்டாண்டை இடமாற்றுவதால் பயனடையும் ரியல் எஸ்டேட் நிறுவனம் மற்றும் ஆளுங்கட்சி பிரமுகர்கள் குறித்து விளக்கமளிக்க வேண்டும். மேலும், அணைப்பாளையம் ஏரிக்கு அருகே பஸ் ஸ்டாண்ட் மாற்றும் திட்டத்தை ரத்து செய்ய, தமிழக அரசின் கவனத்திற்கு கொண்டு சென்று நடவடிக்கை எடுக்க வேண்டும். தமிழக அரசும், மாவட்ட நிர்வாகமும் தலையிட்டு, பஸ் ஸ்டாண்ட் இடமாறுதல் நடவடிக்கையை திரும்ப பெற உரிய நடவடிக்கை எடுக்க வலியுறுத்துவது உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

