/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
உடனடி ரசீது வாகனம் மூலம்ராசிபுரம் நகராட்சியில் வரி வசூல்
/
உடனடி ரசீது வாகனம் மூலம்ராசிபுரம் நகராட்சியில் வரி வசூல்
உடனடி ரசீது வாகனம் மூலம்ராசிபுரம் நகராட்சியில் வரி வசூல்
உடனடி ரசீது வாகனம் மூலம்ராசிபுரம் நகராட்சியில் வரி வசூல்
ADDED : மார் 15, 2025 02:48 AM
உடனடி ரசீது வாகனம் மூலம்ராசிபுரம் நகராட்சியில் வரி வசூல்
ராசிபுரம்:ராசிபுரம் நகராட்சியில், வரியினங்களை வசூலிக்க பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர்.
குறிப்பிட்ட நாட்களில் கட்டணங்களை செலுத்தினால் தள்ளுபடி வழங்குவது உள்பட பல்வேறு வகையான நடவடிக்கையை தொடங்கியுள்ளனர். ஆட்டோ மூலம் பிரசாரம், ஊழியர்கள் மூலம் வீடு, கடைகளுக்கு சென்று நினைவூட்டுதல் போன்ற பணிகளை செய்து வருகின்றனர்.
நகராட்சியில் புதிய பஸ் ஸ்டாண்ட், பழைய பஸ் ஸ்டாண்ட் உள்ளிட்ட முக்கியமாக மக்கள் சந்திக்கும் இடங்களில், நகராட்சி சார்பில் பேனர் வைக்கப்பட்டுள்ளது.
அதில், 'சொத்துவரி செலுத்துவீர், நகரை சொர்க்கபுரி ஆக்குவீர்; தொழல்வரி செலுத்துவீர், நகரில் பூம் பொழில்கள் பல உருவாக்குவீர்; வரியினங்கள் வலிய வந்து வசூலிப்பது அல்ல, தானாக வந்து செலுத்த வேண்டியது; நகராட்சிக்கு உரிய காலத்தில் வரி செலுத்துவீர், நகரின் நலன் பேணும் நற்குடிமகன் என நெஞ்சம் நிமிர்த்துவீர்' என, குறிப்பிடப்பட்டுள்ளது.
நிதியாண்டு முடியும் நிலையில், சொத்து வரி, வணிக வரி, குடிநீர் வரிகளை வசூலிக்க நடமாடும் உடனடி சொத்து வரி ரசீது வாகனம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ஒவ்வொரு வார்டாக சென்று பாக்கியுள்ளவர்களிடம் பேசி, வரியினத்தை பெறுவதுடன் பொதுமக்களின் நன்மதிப்பை சம்பாதிக்க, உடனடியாக ரசீதும் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மேலும், ஆன்லைனில் எவ்வாறு வரி செலுத்த வேண்டும் என்பது குறித்தும் நோட்டீஸ் வழங்கி வருகின்றனர்.