/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
தமிழக இயல், இசை, நாடக மன்றம்சார்பில் கலைச்சங்கமம் கிராம நிகழ்ச்சி
/
தமிழக இயல், இசை, நாடக மன்றம்சார்பில் கலைச்சங்கமம் கிராம நிகழ்ச்சி
தமிழக இயல், இசை, நாடக மன்றம்சார்பில் கலைச்சங்கமம் கிராம நிகழ்ச்சி
தமிழக இயல், இசை, நாடக மன்றம்சார்பில் கலைச்சங்கமம் கிராம நிகழ்ச்சி
ADDED : மார் 30, 2025 01:26 AM
தமிழக இயல், இசை, நாடக மன்றம்சார்பில் கலைச்சங்கமம் கிராம நிகழ்ச்சி
நாமக்கல்:கலை பண்பாட்டுத்துறையின், தமிழக இயல், இசை, நாடக மன்றம் சார்பில், கலைச்சங்கமம் கிராமியக் கலை நிகழ்ச்சி, நாமக்கல்லில் நேற்று நடந்தது. கலெக்டர் உமா தலைமை வகித்தார்.
தொடர்ந்து அவர் பேசியதாவது:தமிழக முதல்வர் ஸ்டாலின், நலிந்து வரும் நாட்டுப்புற கலைகளை காக்க, கலை பண்பாட்டுத்துறை சார்பில், பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறார். மேலும், நாட்டுப்புற கலைஞர்களை ஊக்குவிக்கும் வகையில், மாநில அளவில் பல்வேறு நிகழ்ச்சிகளை நடத்தி, பரிசுத்தொகை, கேடயங்களை வழங்கி வருகிறார்.
அதேபோல், நையாண்டி மேளம், கரகாட்டம், காவடியாட்டம், புரவியாட்டம், காளை ஆட்டம், மயிலாட்டம், பறையாட்டம், கிராமிய பாட்டு, தெருக்கூத்து, இசை நாடகம், நாடகம், சிலம்பாட்டம், மல்லர் கம்பம், கும்மி, கோலாட்டம் உள்ளிட்ட பல்வேறு கலைஞர்களை ஊக்குவிக்கும் வகையில், 'நம்ம ஊரு திருவிழா' நடத்தப்படுகிறது.
இவ்வாறு அவர் பேசினார்.தொடர்ந்து, 50 கிராமிய கலைஞர்களுக்கு கேடயம் மற்றும் தலா, 3,000 ரூபாய் பரிசு தொகை வழங்கினார்.