/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
கரி நாளை முன்னிட்டு இறைச்சி விற்பனை ஜோர்
/
கரி நாளை முன்னிட்டு இறைச்சி விற்பனை ஜோர்
ADDED : ஜன 17, 2025 01:15 AM
கரி நாளை முன்னிட்டு இறைச்சி விற்பனை ஜோர்
நாமக்கல் : பொங்கல் பண்டிகை கரி நாளை முன்னிட்டு, நாமக்கல் பகுதியில் செயல்படும் இறைச்சி கடைகளில் விற்பனை ஜோராக நடந்தது.
பொங்கல் பண்டிகை கடந்த, 14ம் தேதி கொண்டாடப்பட்ட நிலையில், நேற்று முன்தினம் மாட்டு பொங்கல் கொண்டாடப்பட்டது. இருப்பினும் திருவள்ளுவர் தினம் என்பதால் மதுக்கடைகள், இறைச்சி கடைகள் மூடப்பட்டு இருந்தன. காணும் பொங்கல் என்றாலும், கரிநாள் என்றாலும், அசைவ பிரியர்களின் வீடுகளில் இறைச்சி சமைத்து
உண்ணுவது வழக்கம்.இதனால் நேற்று அதிகாலை முதலே, நாமக்கல்லில் சேந்தமங்கலம் சாலை, மோகனுார் சாலை, திருச்சி சாலைகளில் உள்ள மட்டன், சிக்கன் ஸ்டால், மீன் கடைகளில் விற்பனை களை கட்டியது. ஆட்டுக்கறி கிலோ, 800 முதல், 850 ரூபாய் வரையிலும், கடல் மீன்கள் அவற்றின் ரகத்தை பொறுத்து கிலோ, 400 முதல், 900 ரூபாய் வரையிலும் விற்பனையானது.
கறிக்கோழி கிலோ, 250 முதல், 300 ரூபாய் வரையிலும், நாட்டுக்கோழி உயிர் எடையில் ஒரு கிலோ, 350 முதல், 500 ரூபாய் வரையிலும் விற்பனையானது. விலையை பொருட்படுத்தாமல் பொதுமக்கள் போட்டி போட்டு வாங்கி சென்றனர்.