/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
சுட்டெரிக்கும் வெயிலை சமாளிக்கவிற்பனைக்கு குவிந்த தர்பூசணி பழம்
/
சுட்டெரிக்கும் வெயிலை சமாளிக்கவிற்பனைக்கு குவிந்த தர்பூசணி பழம்
சுட்டெரிக்கும் வெயிலை சமாளிக்கவிற்பனைக்கு குவிந்த தர்பூசணி பழம்
சுட்டெரிக்கும் வெயிலை சமாளிக்கவிற்பனைக்கு குவிந்த தர்பூசணி பழம்
ADDED : பிப் 13, 2025 01:38 AM
சுட்டெரிக்கும் வெயிலை சமாளிக்கவிற்பனைக்கு குவிந்த தர்பூசணி பழம்
பள்ளிப்பாளையம்:கோடைகாலம் துவங்குவதற்கு முன்பே வெயில் சுட்டெரிப்பதால், பள்ளிப்பாளையம் சுற்று வட்டாரத்தில் தர்பூசணி பழங்கள் விற்பனைக்கு ஆங்காங்கே குவித்து வைக்கப்பட்டுள்ளன.
கோடை காலம் இன்னும் துவங்கவில்லை. தற்போது, அதிகாலையில் அதிகளவு பனிப்பொழிவும், மதிய நேரத்தில் வெயில் சுட்டெரித்தும் வருகிறது.
வழக்கமாக கோடைகாலம் துவங்கிய பின், ஆங்காங்கே தர்பூசணி கடைகள் அமைக்கப்படும். ஆனால், தற்போது கோடை காலம் துவங்குவதற்கு முன்பே, பள்ளிப்பாளையம் சுற்று வட்டாரத்தில் தர்பூசணி பழங்கள் விற்பனைக்கு குவித்து வைக்கப்பட்டுள்ளன.
இதுகுறித்து, தர்பூசணி வியாபாரி கூறியதாவது: திண்டிவனம் பகுதியில் இருந்து தர்பூசணி பழங்கள் விற்பனைக்கு வருகிறது. மே மாதம் வரை தர்பூசணி விற்பனைக்கு வந்து கொண்டிருக்கும். ஒருகிலோ தர்பூசணி, 25 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. இதனை, ஆர்வமுடன் பொதுமக்கள் வாங்கி செல்கின்றனர். கோடை துவங்கினால், விற்பனை இரண்டு மடங்கு அதிகரிக்கும், விலையும் உயர வாய்ப்புள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.