/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
ஆசிரியர்களுக்கு அறிவியல் பாடத்தில்'பாவனை செய்தல்' குறித்து கருத்தரங்கு

ADDED : பிப் 18, 2025 01:33 AM
ராசிபுரம்:ராசிபுரம், அண்ணாசாலை அரசு மேல்நிலைப்பள்ளியில், நேற்று மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனம் சார்பில், அறிவியல் பாடத்தில், 'பாவனை செய்தல்' என்ற பெயரில் கருத்தரங்கு நடந்தது. பயிற்சி நிறுவன முதல்வர் செல்வம் தலைமை வகித்து பேசியதாவது:
'பாவனை செய்தல்' என்பது இயற்கையான பொருள்களையோ, செயல்பாடுகளின் நிலைகளையோ, கருவிகள் இயங்கும் விதத்தையோ மாதிரி களை கொண்டோ, கணினி மாதிரி மென்பொருள் கொண்டோ பாவித்தல் அல்லது போலியாக நடிக்க செய்தல், உருவகப்படுத்தல் எனப்படும். அறிவியல் பாடங்களில் உள்ள விதிகள் எவ்விதம் செயல்படுகிறது; அறிவியல் பரிசோதனையில் ஒவ்வொரு நிலைகளாக மாற்றமடைவது; அறிவியல் கருவிகள் செயல்படுதல் போல பாவனை செய்வதால், சிக்கலான அறிவியல் கருத்துகளை மாணவர்கள் எளிதில் புரிந்து கொள்வார்கள். கற்பித்தலுக்கும், கற்றலுக்கும் நேரம் குறைவதுடன், செலவும் குறையும்.
இவ்வாறு அவர் பேசினார்.நிறுவன விரிவுரையாளர் செல்லதுரை, பெட், அவகேட்ரோ பாவனை செய்யும் கணினி மாதிரி மென்பொருட்களை கொண்டு, உயர்தொடக்க நிலை அறிவியல் பாடங்களில் உள்ள இயற்பியல், வேதியியல், உயிரியல் பாடக்கருத்துக்களுக்கு போலி நடிப்பு அல்லது பாவித்தல் அணுகுமுறை குறித்து பயிற்சி அளித்தார்.