/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
மாவட்டத்தில் மின்வாரிய குறைதீர் முகாம் அறிவிப்பு
/
மாவட்டத்தில் மின்வாரிய குறைதீர் முகாம் அறிவிப்பு
ADDED : செப் 04, 2024 09:30 AM
நாமக்கல்: நாமக்கல் வட்ட மின்வாரிய மேற்பார்வை பொறியாளர் சபாநாயகம் வெளியிட்ட அறிக்கை: நாமக்கல் மின் பகிர்மான வட்டத்தில், மாதந்-தோறும் தமிழ்நாடு மின்சார வாரியம் சார்பில், செயற்பொறியாளர் அலுவலகங்களில் மின் நுகர்வோர் குறைதீர் கூட்டம் நடத்தப்பட்டு, குறைகள் நேரடியாக கேட்டு, தீர்வு காணப்படுகி-றது.
அதன்படி, செப்., மாதத்திற்கான மின் நுகர்வோர் கூட்டம், இன்று காலை, 11:00 மணிக்கு நாமக்கல் மின்வாரிய செயற்பொறியாளர் அலுவலகத்தில் நடக்கிறது. வரும், 11 காலை, 11:00 மணிக்கு, ப.வேலுார் மின்வாரிய செயற்பொறியாளர் அலு-வலகத்திலும்; செப்., 18 காலை, 11:00 மணிக்கு, திருச்செங்கோடு செயற்பொறியாளர் அலுவல-கத்திலும்; 21 காலை, 11:00 மணிக்கு பள்ளிப்பா-ளையம் செயற்பொறியாளர் அலுவலகத்திலும்; 25 காலை, 11:00 மணிக்கு ராசிபுரம் செயற்பொறி-யாளர் அலுவலகத்திலும், மின் நுகர்வோர் குறைதீர் கூட்டம் நடைபெற உள்ளது.மின் நுகர்வோர் மற்றும் பொதுமக்கள், சம்பந்தப்பட்ட செயற்பொறியாளர் அலுவலகங்களில் நடை-பெறும், குறைதீர் கூட்டங்களில் கலந்துகொண்டு, மின்வாரியம் சம்பந்தமான குறைகளை மனுக்க-ளாக அளித்து தீர்வு பெறலாம்.இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.