/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
சிதிலமடைந்த கட்டடங்கள் இடிக்கப்படுமா?
/
சிதிலமடைந்த கட்டடங்கள் இடிக்கப்படுமா?
ADDED : ஆக 30, 2024 04:51 AM
சேந்தமங்கலம்: சேந்தமங்கலம் டவுன் பஞ்., போலீஸ் குடியிருப்பின் அருகில், சிதிலமடைந்து வரும் கட்டடங்களை இடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
சேந்தமங்கலம் டவுன் பஞ்., போலீஸ் குடியிருப்பின் எதிரில், சில ஆண்டுகளுக்கு முன்பு வருவாய் துறையின் அலுவலகங்கள் இங்கு செயல்பட்டு வந்தன. அதன்பின், இந்த அலுவலகங்களுக்கு மாற்றாக புதிய கட்டடங்கள் கட்டப்பட்டு, வேறு இடத்திற்கு மாற்றம் செய்யப்பட்டது. இந்நிலையில், கடந்த ஐந்து ஆண்டுகளுக்கும் மேலாக இங்குள்ள பழைய கட்டடங்கள் பழுதடைந்த நிலையில் காணப்படுகிறது. மேலும் கட்டடங்களை சுற்றி புதர் மண்டி காணப்படுகிறது. எனவே, சிதிலமடைந்த கட்டடங்களை அதிகாரிகள் இடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, கோரிக்கை எழுந்துள்ளது.